2021 புதன் வக்ர பெயர்ச்சி…இந்த 7 ராசிக்கு ஆபத்து !

புதன் வக்ர பெயர்ச்சி ? எந்த ராசிக்கு ஆபத்து ? எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் ?

புதன் வக்ர பெயர்ச்சி யால் அடுத்து வரும் ஒரு மாதம் உஷாரா இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்?அதில உங்கள் ராசியும் இருக்கா?

 • ஜோதிடத்தில் வியாபாரம், பேச்சு, பகுப்பாய்வு ஆகியவைக்கு சொந்தக்காரர் புதன் பகவான். அவர் தனது சொந்த ராசியான கன்னி ராசியில் வக்ர நிலை அடைவது முக்கியமான விளைவாக பார்க்கப்படுகிறது.
 • மேலும் புதன் ஒருவரது புத்தி, அறிவு, உணர்வு, போன்றவற்றை குறிக்கும் கிரகமாகும். இத்தகைய புதன் அக்டோபர் 02 ஆம் தேதி கன்னி ராசியில் வக்ர நிலை கொண்டு அதிகாலை 3.23 மணிக்கு நுழைந்தார். அதன் பின் 2021 நவம்பர் 2 ஆம் தேதி காலை 9.43 மணிக்கு துலாம் ராசிக்கு மாறிவிடுவார்.
 • புதனின் இந்த வக்ர பெயர்ச்சி பல ராசிகர்களின் வாழ்வை திருப்பிப் போட்டு விடும். அதாவது இந்த கால கட்டத்தில் அதிகமான பிரச்சினை ஏற்படும்.
 • இந்த பெயர்ச்சி யால் 12 ராசிக்காரர்களுக்கும் என்ன மாதிரி பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

புதன் வக்ர பெயர்ச்சி

புதன் வக்ர பெயர்ச்சி :

மேஷம்:

 • மேஷ ராசியின் 6வது வீட்டிற்கு புதன் பின்னோக்கி செல்கிறார்.சக ஊழியர்கள் மற்றும் எதிரிகளிடம் அனுசரித்து செல்வக்கூடிய நிலை வரும்.
 • எந்த ஒரு விஷயத்தில் அவசர முடிவையும் எடுக்க வேண்டாம்.உங்கள்
 • ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தூக்கமின்மை, நரம்பு சம்பந்தமான பிரச்சினை வராலம்.

ரிஷபம்:

 • ரிஷப ராசியின் 5வது வீட்டிற்கு புதன் செல்கிறார்.இதனால் உங்கள் நிதி வாழ்க்கை யில் பிரச்சினை வரலாம்.
 • வியாபாரம் செய்பவர்கள் எந்த ஒரு புதிய முதலீட்டையும் தவிர்க்க வேண்டும். பங்கு சந்தையில் இருப்பவர்கள் நஷ்டத்தை ஏற்கும் சூழல் உருவாகும்.
 • எனவே ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு தேவையான செலவுகளை மட்டும் செய்ய வேண்டும்.

https://www.tomorrowhoroscope.com/மேஷ-ராசி-அக்டோபர்-மாத-ராச/

மிதுனம்:

 • மிதுன ராசியில் 4வது வீட்டிற்கு புதன் பின்னோக்கி செல்கிறார். இந்த நேரத்தில் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும். எனவே எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
 • மேலும் பயணத்தின் போது உங்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 • மாணவர்கள் கவனம் சிதறாமல் பாடங்களை படிக்க வேண்டும்.

கடகம்:

 • கடக ராசியில் 3வது வீட்டிற்கு புதன் பின்னோக்கி செல்கிறார்.
 • இந்த நேரத்தில் எந்த ஒரு செயலை செய்யும் முன்பு ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
 • மேலும் பணியிடத்தில் நீங்கள் பேசும்போது கோபப்படாமல் சற்று கவனமுடன் பேச வேண்டும்.
 • மேலும் புதிதாக வியாபார ஒப்பந்தங்கள் செய்ய வேண்டாம்.

https://www.tomorrowhoroscope.com/2021-அக்டோபர்-மாத-ராசிபலன்-ரி/

சிம்மம்:

 • சிம்ம ராசியில் 2 வது வீட்டிற்கு புதன் பின்னோக்கி செல்கிறார்.இதனால் நிதி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
 • தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்ய கூடாது. பேச்சில் கவனம் தேவை.

கன்னி:

 • கன்னி ராசியில் 2வது வீட்டிற்கு புதன் பின்னோக்கி செல்கிறார்.இதனால் சில நேரங்களில் நீங்கள் குழப்பம் அடையலாம். மேலும் உறவுகளுக்கு இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உண்டு.
 • மேலும் உங்கள் எதிரிகளிடம் சற்று எச்சரிக்கை தேவை.

புதன் வக்ர பெயர்ச்சி துலாம்:

 • துலாம் ராசியில் 12வது வீட்டிற்கு புதன் பின்னோக்கி செல்கிறார்.இக்காலத்தில் உங்கள் எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்வார்கள்.
 • எனவே சற்று கவனம் வேண்டும். மேலும் பிறரிடம் உங்கள் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
 • நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இதன் மூலம் வெற்றி பெறலாம்.

https://www.tomorrowhoroscope.com/துலாம்-தனுசு-மகரம்-வார-ரா/

விருச்சிகம்:

 • விருச்சிக ராசியில் 11வது வீட்டிற்கு புதன் பின்னோக்கி செல்கிறார். இதனால் சகோதர சகோதிரிகளிடம் சில மனஸ்தாபம் ஏற்படும்.
 • புதிய நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

தனுசு:

 • தனுசு ராசியில் 10வது வீட்டிற்கு புதன் பின்னோக்கி செல்கிறார். இந்த நேரத்தில் நீங்கள் திமிர் பிடித்தது போல இருக்கலாம்.
 • இதனால் பணியிடத்தில் நீங்கள் சொல்வது பிறரை வருத்த மடைய செய்யும்.
 • எனவே சற்று சிந்தித்து பேச வேண்டும். மேலும் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நன்றாக இருக்கிறது.

மகரம்:

 • மகர ராசியில் 9வது வீட்டிற்கு புதன் பின்னோக்கி செல்கிறார். இந்நிலை உங்கள் சட்ட விஷயங்களை பாதிக்கும்.
 • இந்த நிலையில் உயர் கல்விக்கு திட்டமிட்டு இருந்தால் சற்று கால தாமதம் ஏற்படும்.
 • மேலும் உங்கள் மன ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

புதன் வக்ர பெயர்ச்சி கும்பம் :

 • கும்ப ராசியில் 8வது வீட்டிற்கு புதன் பின்னோக்கி செல்கிறார். இந்த நேரத்தில் கடன் கொடுக்கவும் வேண்டாம்.
 • வாங்கவும் வேண்டாம். மேலும் சூதாட்டம் போன்ற விசயங்களில் ஈடுபடக்கூடாது. இதனால் இழப்பு ஏற்படும்.

https://www.tomorrowhoroscope.com/4-கிரகம்-ஒன்று-சேருவதால்-அ/

புதன் வக்ர பெயர்ச்சி மீனம்:

 • மீன ராசியில் 7வது வீட்டிற்கு புதன் செல்கிறார். இந்த நிலையில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து போடுதல், வணிக பரிவர்த்தனை போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
 • மேலும் திருமணம் ஆனவர்கள் தங்கள் துணையை புரிந்தது கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
 • இந்த கால கட்டத்தில் நிதி வாழ்க்கை நன்றாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *