Meenam guru peyarchi 2021 to 2022

Meenam guru peyarchi 2021

Meenam guru peyarchi 2021…மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அதிஸ்டமா??கவனமா??என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்…

 • மீன ராசி அன்பர்களே!மகர ராசியில் அமர்ந்து பலன்களை கொடுத்து கொண்டிருந்த குரு பகவான் 13.11.2021 முதல் கும்ப ராசிக்கு மாறுகிறார்.
 • உங்கள் ராசியை பொறுத்தவரை 12ம் இடமான விரைய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பார் .
 • 12ம் இடம் உங்களுக்கு அதிஷ்டமா என்ற கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
 • விரைய ஸ்தானத்தில் குருபகவான் செல்வதால் தேவையற்ற செலவுகள் அதிகமாக இருக்கும்.
 • எவ்வளவு முயன்றாலும் உங்களால் பணம் சேமிக்க முடியாது.விட்டு கொடுத்தால் மட்டும் பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.
 • எல்லாரையும் அனுசரிச்சி செல்ல வேண்டும்.

Meenam guru peyarchi 2021

வேலையில் நிதானம்:

 • உங்களுடைய வேலையை நீங்களே முன்னின்று செய்ய வேண்டும்.இல்லையென்றால் தேவையில்லாத சில பாதிப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
 • திடீர் இடமாற்றம் ஏற்படும்.கிரகங்கள் வலுவாக இருந்தால் பதிவு உயர்வு எதிர் பார்க்கலாம்.
 • பெரிய மனிதர்களின் சந்திப்பு நிறைய உதவிகளை ஏற்படுத்தி கொடுக்கும்.
 • யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.வரவு,செலவுகளில் விழிப்புணர்வு வேண்டும்.
 • வாடிக்கையாளர்களிடம் அன்புடன் பேச வேண்டும்.
 • பங்கு தரார்களின் மூலமாக சில தொந்தரவுகளை சந்திப்பீர்கள்.
 • அழகுசாதன பொருள்கள்,டிராவல்ஸ் போன்றவற்றில் லாபம் கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/kumbam-guru-peyarchi-2021-to-2022/

Meenam guru peyarchi 2021 விமர்சனங்களால் சோர்வு:

 • உங்களை பற்றி கேக்கும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டாம்.
 • மேலதிகாரிகள் செயல்கள் வருத்தத்தை ஏற்படுத்தும்.இருந்தாலும் உங்கள் வேலையை பார்த்தால் மனகஷ்டம் ஏற்படாது.
 • கலைநர்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.தவறாத கருத்துகள் நீங்கி அனைவரும் பாராட்டுவது உங்களுக்கு சில நேரங்களில் ஆறுதலை ஏற்படுத்தும்.
 • ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம்.ஓய்வில்லாமல் நீங்கள் உழைத்தாலும் அதற்கேற்ற அங்கிகாரம் கிடைக்கும்.

Meenam guru peyarchi 2021 குடும்பத்தில் மாற்றங்கள்:

 • குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.எதிர்பாராத தொல்லைகள்,பண விரயம்,வழக்குகள் வந்தாலும் மற்ற கிரகங்கள் சாதகமாக இருப்பதால் சங்கடங்கள் குறைவாகவே இருக்கும்.
 • பணவர்த்து அதிகமாகவே இருக்கும்.கணவன்,மனைவி உறவில் அன்பு வெளிப்படும்.
 • சுப நிகழ்ச்சிகளை நடத்தி மன மகிழ்ச்சி ஏற்படும்.
 • தடைபட்ட திருமணம்,குழந்தை பாக்கியம் போன்ற நன்மைகளும் நடக்கும்.பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.

கல்வியில் தேர்ச்சி:

 • புதன்,குரு நன்றாக இருப்பதால் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
 • கவனம் அதிகரித்து எதிலும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செயல் படுவீர்கள்.
 • மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
 • புதிய முயர்ச்சிகள்,கல்லூரி,வெளிநாடு போன்ற விசயங்களில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
 • வண்டி, வாகனங்களில் செல்லும் போது நிதானம் வேண்டும்.

https://www.tomorrowhoroscope.com/magaram-guru-peyarchi-2021/

பூரட்டாதி 4ம் பாதம்:

 • தொழில் செய்பவர்கள் லாபத்தை பார்ப்பீர்கள்.நண்பர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
 • குடும்பத்தில் உள்ள பெரியவர்கலின் சொல்படி நடப்பது நல்லது.
 • பேசும் வார்த்தைகளில் நிதானம் வேண்டும்.
 • வீட்டிற்கு தேவையான பொருளாகளில் மனதிற்கு பிடித்ததை வாங்கி சந்தோசம் ஏற்படும்.
 • உறவினர்களின் மத்தியில் உங்கள் திறமை பாராட்டப்படும்.

உத்திரட்டாதி:

 • பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
 • உங்களுடைய வேலையை அடுத்தவர் நம்பி ஒப்படைக்க வேண்டாம்.கவனக்குறைவு இல்லாமல் படித்தால்தான் தேர்ச்சி பெறமுடியும்.
 • கணவன்,மனைவி இடையே சண்டை சச்சரவு வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது.
 • நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் தருணம் அமையும்.
 • பழைய நண்பர்களை சந்தித்து மணவிட்டு பேசுவதால் மனபாரம் குறையும்.
 • தன்னம்பிக்கையோடு எந்த செயலை செய்தாலும் சாதிக்க முடியும்.

ரேவதி:

 • வெளிநாடு செல்லும் பயணம் சத்தியம் ஆகும்.ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் சேமிக்க முடியும்.
 • வீட்டிற்கு மின்சாதன பொருள்கள் வாங்குவீர்கள்.இருக்கும் வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு இடமாற்றம் செய்யலாம்.
 • சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
 • எதிலும் ஒரு யோசனை அதிகமாக இருக்கும் நம்பிக்கை மற்றும் இஷ்ட தெய்வத்தின் வழிபாடு உங்களை நல்ல பாதையில் இட்டு செல்லும்.

வழிபாடு:

மகான்கள்,சித்தர்கள் சமாதி இருக்கும் ஆலயங்களில் வழிபாடு செய்வது தடைகளை தாண்டி நீங்கள் நினைக்கும் காரியங்களில் வெற்றியை ஏற்படுத்தி கொடுக்கும்.

thanusu guru peyarchi 2021 to 2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *