Kadagam guru peyarchi 2021 to 2022

Kadagam guru peyarchi 2021

Kadagam guru peyarchi 2021 ..இந்த ராசியில் பிறந்தவர்களின் அடுத்த வரும் 1வருட வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற ஜோதிட கணிப்பை பார்க்கலாம்….

 • கடக ராசி அன்பர்களே!மகர ராசியில் அமர்ந்து உங்கள் ராசியை பார்த்து கொண்டிருந்த குரு பகவான் 13.11.2021 முதல் கும்ப ராசிக்கு மாறுகிறார். உங்கள் ராசியை பொறுத்தவரை 8இல் குரு மாறுக்கிறார்.
 • 8ம் பார்வை கலகத்தை ஏற்படுத்துமா ??கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
 • கடக ராசியில் பிறந்த உங்களுக்கு குரு இப்போது ஸ்திர வீட்டில் மாறுவதால் நல்ல பலன்கள் தான் உங்களுக்கு கிடைக்கும்.
 • விபரீதராஜ யோகத்தை அடைய போகிறீர்கள் .

Kadagam guru peyarchi 2021:

கிரக சேர்க்கையில் ஆற்றல்:

 • கடக ராசிக்கு 6ம் அதிபதி 8ம் இடம் செல்லும் போது ராஜயோக வேலையைத்தான் செய்வார். எனவே குரு பகவான் உங்களுக்கு கெடுதல் செய்ய மாட்டார்.
 • உங்களுக்கு மதிப்பு,மரியாதை தரக்கூடிய அமைப்பு தான் இருக்கிறது.
 • சொந்த வீடு வாங்குதல்,தொழில் தொடங்குதல் போன்ற அதிஷ்ட பலன்கள் கிடைக்கும்.
 • குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும்.

https://www.tomorrowhoroscope.com/mithunam-guru-peyarchi-2021/

Kadagam guru peyarchi 2021 குடும்பத்தில் ஒற்றுமை:

 • சகோதர,சகோதரிகள் முழு ஒத்துழைப்பையும் தருவார்கள்.
 • பூர்விக சொத்து விற்று புதிய சொத்து சேர்க்கை ஏற்படும்.
 • தந்தையின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும்.
 • அவருக்காக மருத்துவ செலவுகள் மேற்கொள்ளலாம்.
 • இளைய மகள்,மகன் வகையில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.
 • வீடு மாற்றம் ஏற்படும்.கணவன் ,மனைவி உறவில் சண்டைகள் வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.

Kadagam guru peyarchi 2021 தொழிலில் அதிஷ்டம்:

 • நல்ல வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
 • பதிவு உயர்வும், அதிகாரி இடத்தில் நல்ல பெயரும் கிடைக்கும் .
 • காவல் துறை பணியில் இருப்பவர்கள் வேலைப்பளு அதிகமாக இருக்கும்.சற்று கவனமாகவும் இருக்க வேண்டும்.
 • தனியார் துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.
 • சுய தொழில் செய்பவர்கள் வங்கிக்கடன் வாங்கி தொழிலை விரிவு செய்வீர்கள்.
 • துணிச்சலான முடிவுகளை எடுத்தால் வெற்றி பெறலாம்.

Kadagam guru peyarchi 2021 கலைஞர்களுக்கு வாய்ப்பு:

 • நாடக துறையில் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு மாற்றம் தரும் பெயற்சியாக குரு மாறுகிறார். இருந்தாலும் நல்லவர் யார்,தீயவர் யார் என தெரிந்து ஒதுங்கி இருப்பது நல்லது.
 • அவர்களால் தேவையற்ற வருத்தங்களை சந்திக்க வேண்டிவரும்.
 • முழு பணத்தை பெற்று கொண்டு உங்கள் நிகழ்ச்சிகளை ஒப்பு கொள்ளுங்கள்.
 • ஊடகம்,தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
 • கவனத்துடன் பணிபுரிந்தால் சாதிக்க முடியும்.
 • மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
 • ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் சாதனை புரிவார்கள்.

புனர்பூசம் 4ம் பாதம்:

 • இந்த குரு பெயர்ச்சி நல்ல மாற்றங்கள் கொடுத்தாலும் எதிலும் நிதானம் வேண்டும்.
 • எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
 • கொடுக்கல், வாங்கலில் அதிக கடன் கொடுக்க வேண்டும்.
 • மாட்டிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
 • பெரிய அளவில் பெண்களுக்கு திடீர் அதிஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
 • குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதம் ஏற்படும்.

https://www.tomorrowhoroscope.com/rishibam-guru-peyarchi-2021/

பூசம்:

 • குரு பகவான் திருப்பங்ககளை ஏற்படுத்த போகிறார்.
 • வாழ்க்கை பாடங்களை கற்று கொடுக்க போகிறார்.
 • நினைத்தது நடக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது.
 • பெண்களுக்கு உயர்ரக ஆடைகள்,வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.
 • சுப காரியங்கள் நடத்தவும், அதனால் சுப செலவுகளும் ஏற்படும்.

ஆயில்யம்:

 • முன்கோபத்தை குறைத்து கொண்டால் உறவுகளை தக்க வைத்து கொள்ள முடியும்.
 • அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு திடீர் இடமாற்றம் உண்டாகும்.
 • பதவி உயர்வும் எதிர்பார்க்கலாம்.
 • தொழிலில் பெரிய அளவில் முதலீடு செய்யும் முன்பு யோசித்து முடிவு செய்ய வேண்டும்.
 • நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.வேலையில் எச்சரிக்கை தேவை.
 • மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்ல வேண்டும்.

பரிகாரம்:

சயணக்கோலத்தில் இருக்கும் ஆதிசேஷன் வழிபாடு செய்தால் வெற்றி கிடைக்கும்.குரு பகவான் கோவில்களுக்கு சென்று வந்தால் தடை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

mesham guru peyarchi 2021 to 2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *