விருச்சிகம் குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

விருச்சிகம் குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

விருச்சிகம் குருபெயர்ச்சி பலன்கள்…இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அடுத்து வரும் நாட்கள் அதிஷ்டமா ?ஆபத்தா?என்பதை விரிவாக பார்க்கலாம்..

 • எதையும் மறைக்காமல் நேரடியாக பேசும் குணம்கொண்ட விருச்சிக ராசி நேயர்களே!உங்கள் ராசிக்கு 4ம் இடத்திற்கு குருபகவான் வருகிறார்.
 • குருபகவான் நவ .20 சனிக்கிழமை மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார்.
 • உங்கள் ராசியை பொறுத்தவரை இது துஸ்தானம் ,விரய ஸ்தானத்தை பார்க்கிறார்.இந்த மாற்றம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று விரிவாக பார்க்கலாம்.

விருச்சிகம் குருபெயர்ச்சி பலன்கள்

ராசிக்கு கிடைக்கும் யோகம்:

 • இதுவரை உங்கள் ராசிக்கு நீச்ச நிலையில் இருந்த குரு இப்போது சம நிலைக்கு வருகிறார்.
 • முதலில் பொருளாதாரத்தில் இருந்த தேக்க நிலையை சரிசெய்வார்.
 • விருச்சிக ராசிக்கு கடந்த காலங்களில் பயம், உடலில் ஆபத்து,கவலை போன்ற விசியங்களால் சோதனைகளை சந்தித்து இருப்பீர்கள்.
 • இப்போது உங்களின் கவலை நீங்கி தெளிவு ஏற்படும்.
 • பெரியோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/துலாம்-குருபெயர்ச்சி-பலன/

விருச்சிகம் குருபெயர்ச்சி பலன்கள் குடும்பம்:

 • சுப கிரகம் 4ம் இடத்தில் சஞ்சரிக்கும் போது ரொம்ப சிறப்பான நன்மைகளை கொடுக்காது.
 • ஆனால் உங்கள் ராசிக்கு தன அதிபதியாக அவர் இருப்பதால் நல்ல பலன்களை கிடைக்கும்.
 • குடும்பத்தில் சண்டையால் பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவார்கள்.
 • உங்களை பற்றி தவறாக பேசியயவர்கள் விலகி செல்வார்கள்.
 • சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
 • பெற்றோரின் அன்பு,பாசம் முழுமையாக கிடைக்கும்.

வியாபாரத்தில் அதிஷ்டம் :

 • குருவின் 10ம் இடது பார்வை கிடைப்பதால் வியாபாரம் சூடு பிடுக்கும்.
 • நினைத்த லாபம் கிடைக்கும்.தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் நிறைவேறும்.
 • புதிய இடங்களில் கிளைகளை திறப்பீர்கள்.செய்யும் வேலையை விட்டு வேறு வேலைக்கு மாறலாம் என்ற எண்ணம் அதிகரிக்கும்.
 • சிறுகுறு தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.
 • கடின உழைப்பால் சோதனைகளை சாதனைகளாக மாற்ற முடியும்.

https://www.tomorrowhoroscope.com/கன்னி-குருபெயர்ச்சி/

ஆரோக்கியத்தில் முன்னேற்றம்:

 • விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் ஆபத்து,பயம் போன்ற விசயங்களில் பாதிக்க பட்டு இருப்பீர்கள்.
 • ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்து இருக்கலாம்.
 • இப்போது அதெல்லாம் மாறி நல்ல தெளிவு ஏற்படும்.தாயின் ஆரோக்யத்துல அக்கறை செலுத்த வேண்டும்.
 • உண்ணும் உணவுகளில் விழிப்புணர்வு வேண்டும்.
 • பயணங்ளை நிறைய மேற்கொள்ளவீர்கள்.
 • மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் காரணமாக செயல்களில் மாற்றங்கள் வெளிப்பட்டு வெற்றி காண்பீர்கள்

விருச்சிகம் குருபெயர்ச்சி பலன்கள் மாணவர்கள்:

 • குருவின் பார்வை பலன் உங்களுக்கு கல்வியில் சிறப்பான பலன்களை ஏற்படுத்தி கொடுக்கும்.
 • உயர்கல்வி படிக்கும் யோகம் நல்லபடியா கைகூடி வரும்.
 • படித்து முடித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு படித்த படிப்புக்கு உற்ற நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.
 • உங்களை பற்றி தவறாக புரிந்து கொண்டு உங்களை விட்டு விலகிய நண்பர்கள் ,உங்களை புரிந்து கொண்டு பேசுவார்கள்.

நிதியில் லாபம்:

 • கொடுக்கல், வாங்கல் போன்ற தொழில் நல்லபடியாக நடக்கும்.
 • பணம் சம்மந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
 • தொழிலில் பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
 • பங்கு சந்தை போன்ற விசயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும்.
 • இல்லையென்றால் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
 • லாபம் கிடைத்தாலும் செலவும் சரியாக இருக்கும்.ஆனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வராது.

பரிகாரம்:

திருவிடைமருதூர் சென்று ஒருமுறை வழிபாடு செய்து வந்தால் நன்மைகள் கிடைக்கும்.பைரவருக்கு வடைமாலை சாற்றி வழிபாடு செய்யும் போது தடை நீங்கி சுபிட்சம் உண்டாகும்.வளமான வாழ்வு கிடைக்கும்.

சிம்மம் குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *