வார ராசிபலன் 25.10.2021 to 31.10.2021

 வார ராசிபலன் 25.10.2021 to 31.10.2021

இந்த வார ராசிபலன் 25.10.2021 to 31.10.2021 துலாம் ,தனுசு ,மகரம் ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு வாரம் என்ன நடக்கும்னு இந்த பதிவில் பார்க்கலாம்.

 • அக்டோபர் மாதத்தின் கடைசி வாரம்.
 • இந்த வாரத்தில் நவகிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் கன்னி ராசியில் புதன் பகவான்,துலாம் ராசியில் சூரியன்,செவ்வாய் பகவான் சஞ்சாரம் செய்கிறார் .
 • விருச்சிக ராசியில் கேது,சுக்கிரன் மற்றும் மகர ராசியில் சனி ,குரு சேர்க்கை நிகழ்வதால்  உங்களுக்கு நல்ல பலன்கள் அமைய உள்ளது.
 • ரிஷப ராசியில் ராகுவின் சஞ்சாரமும் நிகழ்கிறது.
 • இந்த வாரம் சந்திரன் மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம் ராசிகளில் சஞ்சாரம் செய்கிறார்.
 • அதேபோல கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
 • இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தினால் துலாம்,தனுசு மற்றும் மகர ராசிகாரர்களுக்கு என்ன விதமான பலன்கள் நடக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 துலாம் வார ராசிபலன் 25.10.2021 to 31.10.2021

 • இந்த வாரம் உங்களுக்கு அதிஷ்டமான வாரமாக இருக்கிறது.
 • அதாவது உங்கள் ராசிக்குள் சூரியன் மற்றும் செவ்வாய் ,2ஆம் வீட்டில் கேது ,சுக்கிரன் சஞ்சரிக்கிறார்.
 • 4ஆம் வீட்டில் சனி,குரு சேர்க்கை நிகழ்வது சாதகமாக இருக்கிறது.
 • 8ஆம் வீட்டில் ராகு,விரைய ஸ்தானத்தில் புதன் இருப்பது உங்களுக்கு யோக பலன்களை வழங்குகிறது.
 • இந்த மாதம் கணவன் மனைவி உறவில் நெருக்கம் அதிகரிக்கும்.
 • இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.
 • வேலை செய்ப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது.
 • எனவே அன்றைய வேலைகளை சோம்பேறி தானம் படாமல் அன்றே முடித்து விடுங்கள்.
 • இந்த மூலம் எந்த பிரச்னையும் வராது.
 • இந்த கால கட்டத்தில் வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும்.
 • மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டி இருக்கும்.

https://www.tomorrowhoroscope.com/சிம்மம்-நவம்பர்-மாத-ராசி/ ‎

தனுசு வார ராசிபலன் 25.10.2021 to 31.10.2021

 • இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சுக்கிரன்  மற்றும் கேது சஞ்சரிக்கிறார்.
 • 2ஆம் வீட்டில் சனி,குரு சேர்க்கை நிகழ்கிறது.
 • 6ஆம் வீட்டில் ராகு பகவான் ,10ஆம் வீட்டில் புதன் பகவான் சேர்க்கை நிகழ்கிறது.
 • லாப ஸ்தானத்தில் சூரியன்,செவ்வாய் சேர்கை நிகழ்வது ஒரு அற்புதமான அமைப்பு.
 • இந்த வாரம் சந்திரன் சஞ்சாரம் சாதகமான பலன் தரும்.
 • இந்த வாரத்தில் நிறைய நல்ல சம்பவங்கள் வீடு தேடி வரும்.
 • திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தை நடைபெறும்.
 • அதாவது மண வயதை அடைந்தவர்களுக்கு நீங்கள் விரும்பிய வாழ்க்கை துணை அமையும்.
 • அரசு வேலை செய்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
 • சிலருக்கு பதவியில் நல்ல இட மாற்றம் உண்டாகும்.
 • தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
 • புதிய ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும்.
 • உங்கள் வங்கி கணக்கில் சேமிப்பு தொகை உயரும்.
 • மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும்.
 • பெண்களுக்கு நன்மைகள் நடைபெறும் என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

https://www.tomorrowhoroscope.com/கடகம்-நவம்பர்-மாத-ராசிபல/

 மகரம் ராசி

 • இந்த வாரம் உங்கள் ராசியிலே சனி,குரு சேர்க்கை நிகழ்கிறது.
 • 5ஆம் வீட்டில் ராகு,9ஆம் வீட்டில் புதன் சஞ்சாரம் நிகழ்கிறது.
 • 10ஆம் வீட்டில் சூரியன்,செவ்வாய்  மற்றும் லாப ஸ்தானத்தில் கேது,சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது.
 • மேலும் 10ல் சூரியன் பதவியை தருவார் என்று சொல்வார்கள்.
 • இந்த வாரம் பண்டிகை கால கட்டம் நெருங்கி வரக்கூடியதாக இருப்பதால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
 • இதன் மூலம் புதியதாக வண்டி,வாகனம்,பொன் ,பொருள் சேர்க்கை உண்டாகும்.
 • இந்த வாரம் வெளி நாட்டில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.
 • பெண்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும்.
 • வெளிநாடு ஏற்றுமதி ,இறக்குமதியால் நல்ல லாபம் கிடைக்கும்.
 • இதனால் சிலர் பழைய வாகனங்களை சீர் செய்வீர்கள்.

ரிஷபம் நவம்பர் மாத ராசிபலன் 2021

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *