ரிஷபம் குருபெயர்ச்சி பலன்கள் 2021 to 2022

ரிஷபம் குருபெயர்ச்சி பலன்கள் 2021 to 2022:

ரிஷபம் குருபெயர்ச்சி பலன்கள்…நவம் 20தேதிக்கு பிறகு உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்..

 • படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் ரிஷிப ராசி நேயர்களே!மகர ராசியில் அமர்ந்து உங்களுக்கு பலன்களை வழங்கி கொண்டிருந்த குரு பகவான் 20.11.2021 முதல் கும்ப ராசிக்கு மாறுகிறார்.
 • உங்கள் ராசியை பொறுத்தவரை 10ம் வீட்டில் தொழில்,கர்மாவை குறிக்கும் கும்பராசியில் குரு சஞ்சரிப்பார்.குரு பார்வை பட்டாலே நமது ஜாதகத்த்தில் உள்ள தோஷங்கள் நீங்கிவிடும்.
 • அவரது சிறப்பான பார்வை பலன்கள் 5,7 ,9 ஆகிய பார்வையால் என்னென்ன அற்புதங்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம் குருபெயர்ச்சி பலன்கள்

கிரக சேர்க்கை:

 • குருவின் 10ம் பார்வையால் புதிய வீடு,நிலம் போன்ற அமைப்பு கிடைக்கும்.
 • வீடு கட்ட லோன் கேட்டு விண்ணப்பம் போட்டு இருந்தால் அது கிடைக்க கிடைக்கும்.பிறகு குரு செவ்வாய் பகவான் சாரத்தில் சஞ்சரிக்கும் போது மிக நல்ல சிறப்பான பலன்களை அனுபவிப்பீர்கள்.
 • நினைத்தது அனைத்தும் நடக்கும்.
 • புகழ்,கௌரவம் ஓங்கும்.அதுவே சதயம் நடச்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது வேலை செய்யும் இடங்களில் பதிவு உயர்வு கிடைக்கும்.
 • குடும்பத்தில் உங்க செல்வாக்கும், செல்வாக்கும் அதிகரிக்கும்.
 • பிறகு குரு பகவான் சொந்த நட்சத்திரமான பூரட்டாதியில் சஞ்சரிக்கும் போது மட்டும் ரொம்பவே கவனமா இருக்கணும்.
 • யோசித்து அனைத்து செயல்களையும் செய்தால் மட்டும் வெற்றி கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/மேஷம்-குருபெயர்ச்சி-பலன்/

குடும்பத்தில் கொண்டாட்டம்:

 • கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி,தெளிவு ஏற்படும்.
 • மகிழ்ச்சியால் முகத்தில் தேஜஸ் தெரியும்.
 • மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி துணிச்சலுடன் முடிவு எடுப்பீர்கள்.
 • முடிவு எடுக்க முடியாமல் முடங்கிபோய் இருந்த நிலை மாறி இதுதான் நான் என்று சிந்தனையின் மூலம் பாராட்டு கிடைக்கும்.
 • கணவன், மனைவி உறவு சுமுகமாக இருக்கும்.உறவுகளில் பிணைப்பு காணப்படும்.
 • குடும்பத்திடன் பயணங்களை கொள்வீர்கள்.
 • ஆன்மீக பயணங்களால் மனஅமைதி ஏற்படும்.
 • விலை உயர்ந்த பொருள்கள்,வண்டி வாகன சேர்க்கை கிடைக்கும்.
 • ஆடம்பர பொருள்களால் அந்தஸ்து உயரும்.

ரிஷபம் குருபெயர்ச்சி பலன்கள் தொழில்:

 • சிறு தொழில் செய்பவர்கள் முதல் பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்கள் வரை லாபத்தை பார்க்க முடியும்.
 • சரக்குகள் விற்காமல் முடங்கி இருந்த சூழ்நிலை மாறி அனைத்து பொருள்களும் விற்று லாபத்தை பார்க்க முடியும்.
 • துணி வியாபாரம்,அழகு சாதன பொருள் விற்பனை,மின்சாதன பொருளாகளை மூலியமாக அனுகூலம் ஏற்படும்.
 • புதிய தொழில் தொடங்கலாம்.பணிபுரிபவர்கள் வேலையில் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி ஆதாயத்தை பார்ப்பீர்கள்.
 • உங்களின் முயற்சிக்கு அங்கிகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டவர்கள் அதற்கேற்ப உயர்வையும், பரிசையும் பெருவீர்கள்.

https://www.tomorrowhoroscope.com/meenam-guru-peyarchi-2021/

மாணவர்களுக்கு பெருமை:

 • கல்வி பயிலும் மாணவர்கள் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெறுவார்கள்.
 • விரும்பிய துறையில் தங்களின் சாதனைகளையும் வெளிப்படுத்தி காட்டுவார்கள்.
 • இதனால் பெற்றோர்களுக்கு பெருமை ஏற்படும்.
 • ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.
 • வெளிநாடு சென்று படிக்கும் ஆசை நிறைவேறும்.

ரிஷபம் குருபெயர்ச்சி பலன்கள்  வெளிநாடு தொடர்பு:

 • வெளிநாடுகளில் இருந்து நல்ல தகவல் தேடி வரும்.
 • வெளிநாடு வேலை எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.
 • தொழிலில் வெளிநாடு வர்த்தகம் அதிஷ்டத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.
 • திடீர் யோகத்தை அனுபவிக்கும் தருணம் உண்டாகும்.

பெண்களுக்கு சந்தோசம்:

 • பெண்களுக்கு வேலைப்பளு குறைந்து காணப்படும்.இதனால் உங்களுக்குன்னு நேரம் ஒதுக்கி நிறைய விசியங்களை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
 • சண்டை, சட்சரவுகள் நீங்கி நிம்மதியாக இருக்க முடியும்.
 • மனதிற்கு பிடித்த வரன் அமைத்து திருமணம் நிச்சியம் ஆகும்.
 • திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
 • ஆடை,அணிகலன்கள் சேர்க்கை அதிகமாகும்.

ஆரோக்கியத்தில் திருப்தி:

 • உடல் ஆரோக்கியத்தில் இருந்த தேக்க நிலை மாறி மேன்மை உண்டாகும்.
 • மருத்துவ செலவு குறைந்து காணப்படும்.
 • தாய்,தந்தை ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
 • பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்,கருப்பை கோளாறுகள் இருந்த அது விரைவில் குணமாகும்.
 • யோகா ,உடற்பயிற்சி செய்வதால் இன்னும் கூடுதல் நன்மையும்,முகத்தில் தெளிவும் கிடைக்கும்

பரிகாரம்:

 • அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
 • ஆதரவற்ற சிறுமி,சிறுவருக்கு புத்தக,நோட்டுகளை வங்கி தர வேண்டும்.

Magaram guru peyarchi 2021 to 2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *