மேஷ ராசி அக்டோபர் மாத ராசிபலன் 2021

மேஷ ராசி அக்டோபர் மாத ராசி 2021:

  • மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்ல இருக்கும் மேஷ ராசி நேயர்களே!
    இந்த மாதம் கிரங்கங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சந்தோசம் நிறைந்த ஒரு மாதமாக இருக்கும்.
  • மேலும் நவக்கிரக அமைப்பு என்ன மாற்றத்தை கொடுக்க போகிறது பற்றி தான் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கிரகநிலை:

  • மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சனி,மற்றும் குருவின் சேர்க்கையால் வேலை செய்யும் இடத்தில் நிறைய மாற்றங்கள் உண்டாகும்.
  • உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் செவ்வாய்,சூரியன் கூட்டணி ஒரு சில சமயங்களில் சவால்களை சந்திக்க வேண்டியது இருக்கும்.
  • சுக்கிரன் 8வது வீட்டில் கேது உடன் இணைகிறார் மனதில் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்.காதல் வாழ்க்கை கடினமாக இருக்கும்.
  • பிரிவினை ஏற்பட வாய்ப்பு இருக்கிற காரணத்தினால் விட்டு கொடுத்து செல்லவும்.

மேஷ ராசி தொழில்:

  • சூரியனுக்கு சனியின் பார்வை கிடைப்பதால் நீசபங்க ராஜ யோகம் அமைப்பு மேஷ ராசிக்கு கிடைக்கிறது.
  • எனவே தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.பணவர்த்து நன்றாகவே இருக்கும்.
  • இருந்தாலும் வரவும்,செலவும் சரியாக இருக்கும்.சுப செலவுகள் அதிகமாக செய்யும் நேரம் இது.தொழிலில் முதலீடு செய்யலாம்.

மேஷ ராசி குடும்பம்:

  • பெண்களுக்கு நகை வாங்கும் அதிஷ்டம் இருக்கு.உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.
  • குடும்ப பொறுப்புகள் அதிகமா இருக்கும்.இருந்தாலும் உங்களுடைய தன்னம்பிக்கையால் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக முடியும்.தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
  • ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்.நடைபயிற்சி, யோகா போன்றவற்றை செய்யலாம் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

மேஷ ராசி

மேஷ ராசி பொருளாதாரம்:

  • பணம் கொடுக்கல் ,வாங்கல் நல்ல படியாக இருக்கும்.உங்களால நிறைய பணம் சேமிக்க முடியும்.
  • கடன் பிரச்சனை எதுவும் இருக்காது.யாரை நம்பியும் ஜாமின் கையெழுத்து மட்டும் போட வேண்டாம்.
  • எந்த பொருளையும் இரவல் வாங்கவும் வேண்டாம்,தரவும் வேண்டாம்.மற்றபடி நிதி நிலைமை இந்த மாதம் சமாளிக்கும் வகையில் இருக்கும்.

மேஷ ராசி மாணவர்கள்:

  • இந்த மாதம் நன்றாக படங்களை படித்து ,போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.
  • மேற்படிப்பு படிக்க முயற்சி செய்யலாம்.விளையாட்டு,இசை,நாடகம் போன்றவற்றில் ஆர்வம் அதிகமாகும்.

கலைஞர்கள்:

  • இந்த மாதம் தொழில் துறையில் வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அதை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டால் உங்கள் திறமை பளிச்சிடும்.
  • இதனால் பெயர்,புகழ் கிடைக்கும்.லாபம் அதிகரிக்கும் அதனால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.
  • விவசாயம் செய்பவர்களுக்கு மகசூல் கிடைத்து போதிய வருமானம் வரும்.வரப்பு சம்பந்தபட்ட வழக்குகள் சாதகமாக முடியும்.

https://www.tomorrowhoroscope.com/விருச்சிக-ராசி-புரட்டாசி/

அஸ்வினி:

  • இந்த மாதம் வருவாய் நன்றாக இருக்கும். நிறைய பயணங்கள் மேற்கொள்வீர்கள்.அது ஆன்மீக பயணமாக இருக்கலாம்.
  • மாணவர்கள் படிப்பில் கவனமாக படிக்கணும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் கிடைக்க வரும்.

பரணி:

  • இந்த மாதம் வண்டி, வாகனம் வாங்கும் யோசனை அதிகரிக்கலாம்.பூர்விக சொத்து சமந்தபட்ட பிரச்சகளை முடிவுக்கு வரலாம்.
  • கணவன்,மனைவி இடையே பாசம் அதிகமாகும்.இருவரும் நண்பர் வீடு விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கார்த்திகை 1-ம் பாதம்:

  • இந்த மாதம் விருந்து,கேளிக்கை என மனம் இன்ப கடலில் மிதக்கும்.பணியில் இடமாற்றம்,பதிவு உயர்வு கிடைக்கும்.
  • பணவரவு தாராளமாக இருக்கும்.ஆரோக்கியம் சமந்தமாக ஒரு சில செலவுகள் மேற்கொள்ளலாம்.

வழிபாடு:

  • சஷ்டி அன்று விரதம் இருந்து முருகன் வழிபாடு செஞ்ச தடை,தமானதம் விலகும்.ஆசைகள் நிறைவேறும்.
  • புதன் கிழமை பெருமாள் வழிபட்டு வர செல்வ செழிப்பு அதிகமாகும்.

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *