மேஷம் புத்தாண்டு ராசிபலன் 2022

மேஷம் புத்தாண்டு ராசிபலன் 2022:

மேஷம் புத்தாண்டு ராசிபலன் 2022…அடுத்து வரும் 365நாட்களும் மேஷ ராசிக்கு அதிஷ்டமா ?ஆபத்தா? என்கின்ற துல்லிய ஜோதிட கணிப்பை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 • துணிச்சலுடன் செயல்களை செய்து,நினைக்கும் காரியங்களில் வெற்றி பெறும் மேஷ ராசி அன்பர்களே!கடந்த வருடங்களில் இருந்த கசப்பான நினைவுகள் நீங்கி காணப்படும்.
 • தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும்.
 • குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
 • பணவர்த்து தாராளமாக இருக்கும்.
 • ஆன்மீக ஈடுபாடு மேலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மேஷம் புத்தாண்டு ராசிபலன் 2022

குடும்பத்தில் குதூகலம்:

 • குடும்பத்தில் அமைதியான சூழ்நிலையை தக்க வைக்க விட்டு கொடுத்து செல்ல வேண்டும்.
 • காதல் விவகாரங்களில் சில முக்கிய முடிவுகளை எடுக்க யோசிக்கலாம்.
 • ஆடம்பர பொருளாகளை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.
 • எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.உறவினர்களின் வருகை மேலும் நல்ல மாற்றங்களை கொடுக்கும்.
 • விலகி சென்ற சொந்த பந்தங்கள் ஒன்று சேரும் வாய்ப்புகளை இந்த வருடம் உங்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கும்.

https://www.tomorrowhoroscope.com/மீனம்-டிசம்பர்-மாத-ராசிப/

தொழிலில் அதிஷ்டம்:

 • பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்காது.
 • சிறுகுறு தொழில் செய்பவர்கள் நல்ல தனலாபத்தை எதிர்பார்க்கலாம்.
 • வேலையில் திடீர் இடமாற்றம் உண்டாகும்.ரியல் எஸ்டேட், பேச்சுகளை மூல தனமாக வைத்து தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தை பெற முடியும்.
 • உத்தியோகத்தில் உயர் அதிகாரியின் ஒத்துழைப்பு மனதிற்கு ஆறுதலாக இருக்கும்.
 • கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகள் மூலியமாக சில சங்கடங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.
 • இருந்தாலும் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இருக்காது.முதலீடு செய்து தொழிலை விரிவு செய்யலாம்.

மாற்றங்களினால் யோகம்:

 • உத்தியோகத்தில் ரொம்ப நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.
 • குழந்தை பாக்கியம் இல்லாமல் வருத்தப்பட்டு கொண்டிருக்கும் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும்.
 • திருமண வரம் நல்ல படியாக அமைத்து தேதி குறிக்கலாம்.
 • புதிய வண்டி,சொத்து,தேவையான பொருள்கள் என அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.
 • நிறைய பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
 • மனதிற்கு இனிமையான தருணங்களை அனுபவிக்க முடியும்.

https://www.tomorrowhoroscope.com/கும்பம்-டிசம்பர்-மாத-ராச/

மேஷம் புத்தாண்டு ராசிபலன் 2022 ஆரோக்கியம்:

 • நோய் தொற்று தாக்காமல் இருக்க முன்னெச்சரிகையாக செயல்பட வேண்டும்.
 • மற்றபடி பெரிய அளவில் எந்த பாதிப்பும் வராது.அலர்ஜி,கை கால்கலில் வலி,அஜீரண கோளாறு போன்றவை அவ்வப்போது வரலாம்.
 • உண்ணும் உணவுகளில் விழிப்புணர்வு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை.
 • வண்டி,வாகனங்களில் செல்லும் போது மிதமான வேகத்தை கடைபிடிப்பது நல்லது.
 • மேஷ ராசியில் பிறந்தவர்கள் வயதவர்களாக இருந்தால் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நன்றாக இருக்கும்.
 • முன்கோபத்தை குறைத்து பேச்சுகளில் நிதானம் வேண்டும்.
 • யோகா,நடைபயிற்சி செய்தல் இன்னும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

பெண்களுக்கு மாற்றம்:

 • பெண்களுக்கு புது வருடம் வேலை பளுவை அதிகமாக்கும்.
 • இருந்தாலும் அவை சுப வேலையாக இருப்பதால் உங்களுக்கு கஷ்டம் தெரியாது.
 • அக்கம் பக்கம் இருப்பவர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.
 • உங்கள் குடும்ப ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம்.உங்கள் வேலையை மட்டும் பார்த்தாலே போதும் நல்ல நிலைமை காணலாம்.
 • பெரியவர்களின் ஆலோசனை உங்களை மேலும் நல்ல பாதைக்கு இட்டு செல்லும்.

மேஷம் புத்தாண்டு ராசிபலன் 2022 கலைஞர்கள்:

 • கலைஞர்களுக்கு வெளிநாடு வாய்ப்புகள் தேடி வரும்.உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும்.
 • வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும்.
 • இசை,நாடக துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் காலதாமதமாக கிடைக்கும்.இருந்தாலும் கைவிட்டு போகாது.ஏமாற்றங்களக்கு தவிர்க்க எதிர்பார்ப்பை குறைத்து கொள்ள வேண்டும்.
 • வாழ்க்கை பாதை புரிந்து கொள்ளமுடியாத வகையில் கொண்டு செல்லும்.இறுதியில் சாதகமான பலன்களை தரும்.

கிரகங்களினால் நன்மை:

 • குருவின் பார்வை உங்களுக்கு லாப ஸ்தானத்தில் விழுவதால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
 • சனியும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சங்கடங்கள் தவிர்க்கப்படும்.
 • நீங்கள் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று வணங்கி வர பல வெற்றிகளை அனுபவிக்கலாம்.
 • குலதெய்வ வழிபாடு நன்மையை ஏற்படுத்தும்.
 • ஏழை ,எளியவர்களுக்கு துணிகளை தானம் செய்வது நல்லது.

துலாம் டிசம்பர் மாத ராசிபலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *