மீனம் புரட்டாசி மாத ராசிபலன் 2021

மீனம் புரட்டாசி மாத ராசி பலன் 2021 :

இன்று கானபோகும் பதிவு மீனம் புரட்டாசி மாத ராசிபலன் 2021

 • அன்புக்கு மட்டும் அடிபணியும் மீனம் ராசி நேயர்களே ,இந்த புரட்டாசி மாதம் நீங்கள் நினைத்த காரியம் நடந்தாலும்,அனைத்திலும் ஒரு கால தாமதம் ஏற்படும்.
 • கடின உழைப்பு தேவைபடுகிறது.பணவரவு நன்றாகவே இருக்கும்.புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கிரக சேர்க்கை:

 • உங்களுடைய ராசிக்கு தைரிய ஸ்தானத்தில் ராகு பகவான் இருக்கிறார் ,எனவே நீங்கள் எடுக்கும் முடிவுகளில் தீர்க்கமாகவும்,தெளிவாகவும் இருக்கும்.
 • லாப ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ),சனி(வ) இருப்பதால் பணவரவு மாதத்தை சமாளிக்கும் வகையில் இருக்கும்.ஒரு சில சமயங்களில் லாபம் இரட்டிப்பாக கூட கிடைக்கும்.

மீனம் ராசி 2021

வாழ்க்கை:

 • குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும்.உறவுனர்களின் வருகையால் வீடு களைகட்டும்.ஒரு சிலருக்கு ஆடை,ஆபரண சேர்க்கை ஏற்படும்.
 • பெண்களுக்கு வேலை சுமை கொஞ்சம் அதிகமாவே இருக்கும். இருந்தாலும் அதற்குண்டான வகையில் மணமகிழ்ச்சியும் இருக்கும்.அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் பார்வை பெண்களுக்கு ஒரு சில வாக்கு வாதங்களை ஏற்படுத்தி கொடுக்கும்,அப்போது மட்டும் பொறுமையை கையாளனும்.

வேலை:

 • உத்தியோகஸ்தர்களுக்கு சில முயற்சிகள் இழுபறிக்கு பின்னர் நடக்கும். எதிர்பார்ப்பை குறைத்து கொள்வது நல்லது.உடன்பணி புரிபவர்கள் முழு ஒத்துழைப்பை தரமாட்டார்கள்.
 • உங்கள் வேலையை நீங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி செய்ய வேண்டி வரும்.ஜனன ஜாதகத்தில் கிரகங்கள் வலுவாக இருந்தால் ஒரு சிலருக்கு பதவி உயர்வு ,விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
 • இளைஞர்களுக்கு படிப்பிற்கு ஏற்ற வேலை அமையும்.வெளிநாடு செல்ல விரும்பி,வேலைக்காக எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் தேடி வரும்.அதன் மூலியமாக லாபம் அதிகரிக்கும்.

நிதி:

 • பொருளாதாரம் நன்றாகவே இருக்கும்.இருந்தாலும் பணம் சேமிக்க முடியாது.வரவும் ,செலவும் கலந்தே இருக்கும்.
 • புனித யாத்திரை செல்ல பணம் செலவு செய்வீர்கள். ஒரு சிலருக்கு மருத்துவ செலவு செய்யவேண்டி வரலாம்.இதனால் மனகஷ்டம் ஏற்படும்.வீட்டிற்கு தேவையான பொருள் வாங்கி மணமகிழ்ச்சியும் அடைவீர்கள்.
 • சுப நிகழ்ச்சிகளுக்காக விரைய செலவு அதிகமாகும்.

https://www.tomorrowhoroscope.com/மகரம்-புரட்டாசி-மாத-ராசி/

கலைஞர்கள்:

 • கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும்.உங்களுடைய திறமையை நிரூபிக்க கொஞ்சம் போராட வேண்டி இருக்கும்.அதற்கேற்ற அங்கீகாரம் நிச்சியம் கிடைக்கும்.
 • விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும். பூர்விக இடம் சமந்தபட்ட பிரச்னைக்கு முடிவுக்கு வரும்.காய்கறி,பயிர் வகைகள் போன்றவை அதிக மகசூல் தரும்.
 • இலக்கியம்,ரியல் எஸ்டேட்,பங்கு சந்தை,மின்சாதன துறையில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

கல்வி:

 • மீன ராசியில் பிறந்த மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்தி படித்தால் வெற்றி கிடைக்கும்.சக மாணவர்கள் நட்புடன் பழகுவார்கள்.
 • மேற்படிப்பு படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு காலம் கைகூடி வந்துள்ளது.
 • போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி படங்களை படிக்கணும்.பெற்றோர் முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.

அரசியல்:

 • அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர்,புகழ் கிடைக்கும். எதிர்பார்த்த பதிவு உயர்வு கிடைக்கும்.
 • எடுத்திருக்கும் அரசங்க வேலை மூலியமாக லாபம் கிடைக்கும்.அரசால் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

பூரட்டாதி 4ம் பாதம்:

 • உங்கள் நட்சத்திர அதிபதி குரு பகவான் 11ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் வெற்றி,கடின உழைப்புக்கு பின்னரே கிடைக்கும்.
 • மருத்துவ செலவு ,சில மனஸ்தாபங்களையும் சந்திக்க வேண்டிவரும்.
 • இருந்தாலும் மனோ திடம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள்.கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்கு வாதம் ஏற்படலாம்.இருந்தாலும் அன்பில் எமது குறையும் இருக்காது.

உத்திரட்டாதி:

 • இந்த மாதம் சனி,குரு சேர்ந்து இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நன்மை தருவதாக இல்லை,இருந்தாலும் கெடுதல் பலன்களை தரமாட்டார்கள்.
 • கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடு வரும் கவனம் தேவை.பெற்றோர் வழியில் முழு ஆதரவும் கிடைக்கும்.
 • கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள்.தொழிலை விரிவாக்கம் செய்ய நிறைய திட்டம் தீட்டிவீர்கள்.

https://www.tomorrowhoroscope.com/புரட்டாசி-மாத-ராசிபலன்-2021-த/

ரேவதி:

 • இந்த மாதம் நீங்கள் நினைத்த காரியம் ஒன்று நடக்கும். இதனால் மணமகிழ்ச்சியும்,திருப்தியும் ஏற்படும்.
 • திருமணம் போன்ற சுபகாரியம் தடை இன்றி நடக்கும்.காதல் விசயத்தில் மட்டும் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
 • சகோதர வகையில் சண்டை, சச்சரவு வர வாய்ப்பு இருக்கு.விட்டு கொடுத்து செல்லவும்.அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய வேலை நல்லபடியாக நடக்கும்.ஒரு சிலருக்கு வேளையில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

வழிபாடு:

 • காலபைரவர் வழிபாடு உங்களுக்கு தடை நீக்கி நன்மை தரும்.சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் பணப் பிரச்சனை நீங்கும்.துன்பம் அண்டாது.தட்சிணாமூர்த்தியை வணங்க கல்வியில் வெற்றி கிடைக்கும்.

அதிஷ்ட கிழமை:
வெள்ளி,ஞாயிறு,புதன்.
அதிஷ்ட நிறம்:
வெள்ளை,ரோஸ்,ஆரஞ்சு.
சந்திராஷ்டம நாள்:
அக் 8,9.

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *