மீனம் குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

மீனம் குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

மீனம் குருபெயர்ச்சி பலன்கள்…இந்த ராசிக்காரங்க அடுத்து அவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்கின்ற துல்லிய ஜோதிட கணிப்பை விரிவாக பார்க்கலாம்…

 • எதற்கும் பயபடாமல் திறம்பட செயலாற்றும் மீன ராசி நேயர்களே!உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் இருந்து பலவிதமான நன்மைகளை செய்து கொடுத்த குரு பகவான் நவ 20 தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
 • உங்க ராசிக்கு 12ம் இடம் அது.இந்த இடம் விரயம்,சம்மந்தமில்லாத பிரச்சினை, தேவையில்லாத அலைச்சலை போன்றவை குறிக்கும்.
 • மீன ராசிக்கு என்னஎன்ன பலன்களை குரு தரப்போகிறார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

மீனம் குருபெயர்ச்சி பலன்கள்

நற்பலன்களை பார்க்கலாம்:

 • புதிய வீடு,மனை போன்றவை வாங்கும் யோகமும் உண்டாகும்.
 • இதற்காக பணம் செலவு செய்வீர்கள். சுக போக வாழ்க்கை கிடைக்கும்.
 • திருமணம் போன்ற நல்ல விசயங்கள் நடக்கும்.இதனால் ஒரு மகிழ்ச்சி ஏற்படும்.
 • தொழில் ரீதியாக சிக்கல்கள் இருந்தாலும் லாபமும் கிடைக்கும்.
 • உங்கள் ராசிக்கு 4ம் இடத்தை குரு பார்ப்பதால் வெளியூர்,வெளிநாடு வாய்ப்பு கிடைக்கும்.இந்த சுகமான நிலை கூட சில சமயங்களில் பிரச்சனைக்குரியதாக மாறலாம்.

https://www.tomorrowhoroscope.com/கும்பம்-குருபெயர்ச்சி-பல/

தேவையற்ற பிரச்சனைகள்:

 • கடன் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்.உங்களுக்கு சம்மந்தமில்லாத பழிசொல்லுக்கு ஆளாக நேரிடலாம்.
 • எதிர்பார்க்காத திருப்பங்கள் ஏற்படும் என்பதால் அமைதியற்ற நிலை காணப்படும்.
 • வேலை இழப்பு,திடீர் இடமாற்றம் போன்ற ஏற்படலாம்.
 • சில சமயங்களில் இது விரும்பத்தகாதவையாக கூட இருக்கலாம்.உடன் இருப்பவர்களே எதிரிகளாக மாறுவார்கள் கவனம் வேண்டும்.

நிதியில் மாற்றங்கள்:

 • நிதியில் பல சிக்கல்கள் வந்தாலும் பணவரவு இருந்துகொண்டே இருக்கும்.
 • நீங்கள் சுப செலவுகளாக மாற்றினால் உங்களுக்கு அதிஷ்டம் .இல்லையென்றால் மருத்துவ செலவுகள்,வீண் விரயம் ஏற்படும்.
 • சம்பள தொகைக்கு கைக்கு வராமல் நிலுவையில் நிற்கும்.
 • உடன் பணிபுரிபர்களால் சில சங்கடங்களை சந்திக்கலாம்.
 • சிறுகுறு தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
 • பெரிய அளவில் கொடுக்கல், வாங்கல் செய்கிறவர்களுக்கு பண இழப்பு ஏற்படும்.இருந்தாலும் கவனமாக இருந்தால் இழப்பை தவிர்க்கலாம்.
 • யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்க வேண்டாம்.

ஆரோக்கியம்:

 • உங்கள் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் வரலாம்.
 • சளி போன்ற தொந்தரவுகள் அதிகமாக இருக்கும் அதனால் குளிர்ச்சியான உணவுகளை உண்பதை தவிர்ப்பது நல்லது.
 • கண் அல்லது தூக்க குறைபாடுகள் சந்திக்க நேரும் எனவே சத்தான உணவு,முறையான ஓய்வு எடுப்பது நல்லது.

https://www.tomorrowhoroscope.com/மகரம்-குரு-பெயர்ச்சி-பலன/

உணர்வுகளில் கவனம்:

 • காதல் உறவுகளை கஷ்டமான போராட்டங்கள சந்திக்க வேண்டிவரும்.
 • பேசும் வார்த்தைகளில் நிதானம் வேண்டும்.
 • தேவையற்ற பேச்சுகளால் உறவுகளை இழக்க நேரிடும்.
 • வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.
 • பெரியவர்களை அனுசரிக்க வேண்டும்.

மீனம் குருபெயர்ச்சி பலன்கள் மாணவர்கள்:

 • கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
 • மனதை ஒருமுக படுத்தி படித்தால் முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
 • வெளிநாடு சென்று படிக்கும் யோகம் பிரகாசமாக இருக்கிறது.
 • வெளியூர் பயணங்கள் அடிக்கடி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

மீனம் குருபெயர்ச்சி பலன்கள் கலைநர்கள்:

 • கலைநர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
 • உங்களை வாய்ப்புகளை முறியடிக்க சில சூழ்ச்சிகளை செய்வார்கள்.
 • அது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.வெளியூர் சென்று பங்குகொள்ளும் வைப்புகளை சரியாக பார்த்துவிட்டு தன் செல்ல வேண்டும்.
 • ஆடம்பர வாழ்க்கை,வசதிகள் பெருகி காணப்படும்.இருந்தாலும் சில சங்கடங்களை சந்திக்க வேண்டிவரும்.பணவரவு நன்றாக இருக்கும்.
 • ஆனால் வரவுக்குஏற்ற செலவும் இருக்கும்.

பரிகாரம்:

உங்கள் தந்தையின் ஆசி பெற்று எந்த செயலை செய்தாலும் வெற்றி கிடைக்கும்.
சித்தர்கள் சமாதி இருக்கும் இடங்களுக்கு சென்று வழிபாடு மற்றும் தியானம் செய்தால் முன்னேற்றம் கிடைக்கும்.வாழ்க்கை வளமாகும்.

தனுசு குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *