மஹாளய அமாவாசை 2021 செய்யவேண்டியவை ? செய்யக்கூடாதவை ?

மாங்கல்ய பலன் அருளும் மஹாளய அமாவாசை 2021:

புரட்டாசி மாதம் வரக்கூடிய மஹாளய அமாவாசை 2021 மிக மிக சிறப்பு வாய்ந்தவை. இந்த பதிவில் அன்று என்ன செய்யவேண்டும் ? என்ன செய்யக்கூடாது ? என்பதை பற்றி காண்போம் !

 • களத்திர தோஷமும், மாங்கல்ய தோஷமும் நீங்கி ஐஸ்வரியம் தரும் புரட்டாசி மஹாளய அமாவாசை.
 • எந்த பரிகாரமாக இருந்தாலும் அது அமாவாசை நாளில் செய்யும் போது சிறப்பை தருகிறது. அதிலும் நமது குடும்பத்தில் சுமங்கலியாக இருந்த பெண்களை பூஜிக்கும் நாளே இந்த அவிதவா நவமி .
 • மஹாளய பட்சத்தின் 15 நாட்களும் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களை வழிபாடு செய்வோம்.
 • இந்த குறிப்பிட்ட நாளில் மஹாளய அமாவாசை அன்று அவிதவா நவமி கொண்டாடப்படுகிறது.
 • இந்த நாளில் தன் கணவர் இருக்கும் போதே ,முன்னதாக இறந்து விட்ட ஆன்மா திருப்திப்படுத்தும் பொருட்டு பெண்களை வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு வஸ்திரம், மங்கள பொருள்களை தந்து, அவர்களுக்கு வயிறார உணவு வழங்க வேண்டும்.
 • சுமங்கலி வழிபாடு,நீங்கள் திதி,தர்ப்பணம் கொடுப்பதற்கு சமமாகவே சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.
 • பொதுவாகவே இந்த வழிபாடு பல ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த பெண்களுக்கு அவர்களின் திதிக்கு மறுநாள் சுமங்கலி வழிபாடு செய்யப்படும். இதை மஹாளய அமாவாசை தினத்தில் செய்வது செல்வ வளம்,மற்றும் தலைமுறையையே வாழ்வாங்கு வாழ செய்யும்.
 • சுமங்கலி முறையை ஒற்றை படை பெண்களை வைத்துதன் செய்யவேண்டும். நாத்தனார் மகள் போன்ற உறவுகளை வைத்தும் செய்யலாம். இல்லையென்றால் அருகில் இருக்கும் சுமங்கலி, ஏழு அல்லது ஒன்பது வயது பெண் குழந்தைகளை சுமங்களிகளுடன் உக்கார வைக்க வேண்டும்.
 • பெண்ணானவள் ,அதாவது மனைவி சுமங்கலியாக இறந்துவிட்டாலும் அவளின் கணவர் செய்யும் காரியங்கள் அனைத்தும் பெண்ணை முன்னிறுத்தி இருக்க வேண்டும்னு சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

https://www.tomorrowhoroscope.com/4-கிரகம்-ஒன்று-சேருவதால்-அ/

 • எனவே மஹாளய அமாவாசை தினத்தில் இறந்த சுமங்கலி,மற்றும் முன்னோர்களுக்கு திதி கொடுத்து,அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து படையல் போட்டு,தீபதூப ஆரத்தி காட்டி, முதலில் காக்கைக்கு உணவு வைத்து பிறகே நீங்கள் உணவு உண்ண வேண்டும்.
 • பெண்களுக்கு மங்கள பொருள்களை தானமாக கொடுத்தால்,ஜாதகத்தில் இருக்கும் களத்திர தோஷம் நீங்கும். குடும்ப ஒற்றுமை அதிகமாகும்.

மஹாளய அமாவாசை 2021

பிரச்சனைகள் தீர :

 • கடன்,சண்டை சட்சரவுகள், வேலை இல்லாமை, குழந்தை கரு சிதைவு, திருமண உறவு முறிதல், ஊனமுற்ற குழந்தை பிறத்தல் போன்ற எதிர்பார்க்காத கஷ்டமே வாழ்க்கையில் வந்து சேர இந்த பிதுர்தோஷம் தான் காரணம்.
 • இவை வராமல் இருக்க இந்த மஹாளய அமாவாசை பயன்படுத்தி வளமான வாழ்க்கை அமைய பயன்படுத்தி கொள்ளுங்கள்.
 • பசுமாட்டிற்கு கீரை,பழங்கள், அரிசி,வெல்லம், தவிடு போன்ற பொருள்களை தானமாக கொடுக்கலாம்.இதை செய்தால் கோமாதவின் அருளால் ஐஸ்வரியம் பெருகும்.காகம் உணவு வைப்பதால் சனி பகவானின் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
 • ஆனால் இந்த நாளில் முன்னோர்களை வணங்கிவிட்டு பிறகு தெய்வ வழிபாடு செய்யணும்.

https://www.tomorrowhoroscope.com/துலாம்-தனுசு-மகரம்-வார-ரா/

மஹாளய அமாவாசை 2021 மறந்துகூட செய்யக்கூடாதவை :

 • அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது.
 • இஞ்சி,பூண்டு சேர்த்து சமைக்க கூடாது.அது சேர்த்த உணவுகளை சாப்பிடவும் கூடாது.
  மாமிசம் உண்ண கூடாது.
 • நகம்,முடி வெட்ட கூடாது.சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு சமைக்க கூடாது.
  தீய சொற்களை பயன்படுத்த கூடாது. நல்ல வார்த்தைகள்,நல்ல சிந்தனை இருக்க வேண்டும்.
 • சுமங்கலி பெண்களிடம் ஆசிர்வாதம் பெற்றால் நல்ல மக்கட்பேறு கிடைக்கும்.மகிழ்ச்சியும், சந்தோஷமும் உங்களுக்கும், உங்கள் தலைமுறைக்கும் நிலைபெற்று இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *