மகரம் புரட்டாசி மாத ராசிபலன் 2021

மகரம் புரட்டாசி மாத ராசிபலன் 2021

புரட்டாசி மாதத்தில் சனி பகவானின் ஆட்சி வீடான மகர ராசிக்காரருக்கு என்னென்ன மாற்றங்கள் நடக்கப்போகுது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்துகொள்ளலாம்.
மற்ற வருடங்களை காட்டிலும் இந்த 2021 பிலவ வருட புரட்டாசி சிறப்பானது.. ஏனென்றால் பெருமாளுக்கு உரிய திருவோண நட்சத்திரத்தில் இந்த பெருமாளை வழிபடக்கூடிய புரட்டாசி மாதமானது (புரட்டாசி 1’ஆம் தேதி) பிறந்துள்ளது… இப்படி பட்ட சிறப்பு பெற்ற புரட்டாசி மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் எப்படி இருக்கு என்றால் ரிஷபத்தில் ராகு, கன்னியில் புதன்,சூரியன்,செவ்வாய்,மகர ராசியில் குரு,சனி ,துலாம் ராசியில் சுக்கிரன்,விருச்சிகத்தில் கேது என கிரகங்கள் அனைத்தும் வலுவாக சஞ்சரிக்கின்றன.
இந்த கிரகத்தின் சஞ்சாரம் காரணமாக மகரம் ராசியின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றம் ஏற்பட உள்ளது…இந்த மாற்றம் உங்களுக்கு நல்லதா தருமா ? இல்ல பாதகமான பலனா தருமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்..!
மகர ராசி நேயர்களே இத்தனை நாட்களாக உங்க வாழ்க்கையில் தொழிலில் முன்னேற்றம் இல்லாமல் இருந்து இருக்கும்.அதேபோல பண வருமானம் நீங்க எதிர்பார்த்தது போல கிடைத்து இருக்காது.இப்படிபட்ட இந்த பிரச்சனைகள் தீர்ந்து நல்ல பலனை தரக்கூடிய வகையில் இந்த புரட்டாசி மாதம் அமைந்துள்ளது.

 

ஸ்

மகர ராசிக்கு இத்தனை நாள் பட்ட கஷ்டத்துக்கு பலன் தரக்கூடிய மாதமாக இருக்கிறது.வெற்றி தேடி வரும்.தொழிலில் இருந்த மந்தநிலை சரியாகும் சிறு மாற்றம் செய்வதன் மூலமாக தொழில் வளர்ச்சியையும்.வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்து காத்திருந்த பண வருமானம் கைக்கு வரும்.வேலை செய்யகூடிய உங்களின் திறமை                வெளிப்படும்.,உயரதிகாரிகளின் பாராட்டை பெருவீர்கள்.மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும்.சாதித்துக்காட்டக்கூடிய தன்னம்பிக்கை வரும்.தனிப்பட்ட வாழ்க்கையும் எந்த வித பெரிய பிரச்சனையும் இந்த மாதம் வராது..உறவினருடன் உறவு சுமுகமாக இருக்கும்.கணவன் மனைவி இடையே சின்ன சின்ன பிரச்சனை வரும். விட்டுக்கொடுத்து போவது உங்க உறவுக்கு நல்லது.

அப்பா உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.மருத்துவ செலவுகூட ஏற்படலாம்.பள்ளி மாணவர்கள் நினைத்த மதிப்பெண்ணை பெறலாம்.அதற்கு இந்த மாதத்தில் சற்று முயற்சி செய்ங்க வெற்றி உங்களை தேடி வரும்.வியாபாரம் யுத்தி புரிந்துகொண்டு வியாபாரம் பெருகும்.லாபம் கிடைக்கும்.தேவையில்லாமல் மற்றவரிடம் வாக்குவாதம் செய்யாதீங்க.வண்டி வாகனம் வாங்ககுடிய யோகமும் இருக்கு.எப்போதுமே வண்டியில் செல்லும் போது கவனமாக இருங்க.ஏழரை சனியோட ஜென்ம சனி நடந்துகொண்டு இருப்பதால் சற்று எதை செய்வதாக இருந்தாலும் யோசித்து நிதானமாக செய்து வாங்க. வெற்றி உங்களை தேடி வரும் என்பதை மறந்துடாதீங்க.

சிலருக்கு புரமோஷன் சம்பள உயர்வு கிடைக்கும்.ஆக இந்த புரட்டாசி 30 நாளிலும் நீங்க செய்யகூடிய முயற்சிக்கு ஏற்ற வெற்றி பலன் கிடைத்துக்கொண்டே இருக்கும் என்பதை மறந்திடாதீங்க.
ஆக மொத்தம் இத்தனை நாட்கள் வாழ்க்கை பற்றி இருந்த வெறுப்பு மாறி வாழ்க்கை மீது ஒரு பிடிப்பு ஏற்படும்.

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *