துலாம் ராசி புரட்டாசி மாத ராசிபலன் 2021

துலாம் ராசி : புரட்டாசி மாத ராசிபலன் 2021;

திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கும் துலாம் ராசி அன்பர்களே…. இந்த மாதம் உங்களுடைய எண்ணத்தில் ஒரு நேர்மறையான சிந்தனைகள் தோன்றும். பயணங்களின் மூலமாக உங்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும் .கோர்ட் கேஸ்களில் சாதகமான தீர்ப்பு உங்களுக்கே கிடைக்கும்.

உங்களை நோக்கி எத்தனை துயரம் வந்தாலும் அனைத்தையும் மனோதிடத்துடன் எதிர் கொள்வீர்கள்.பொருளாதார இழப்புகளை சரி செய்து முன்னேற்றமும் அடைவீர்கள்.

வேலையில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு மேலிடத்தில் பாராட்டையும் பெறுவீர்கள்.உடன் பணிபுரிபவர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டு நீங்கும்.

பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான போக்கு காணப்படும்.கணவன்,மனைவி ஒருவருக்கு ஒருவர் உதவுகளை செய்விர்கள்.இதனால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

உண்ணும் உணவு,மற்றும் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும்.மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் பார்க்கலாம்.பெரியோர்களின் ஆதரவால் போட்டி தேர்வுவில் வெற்றி பெற முடியும்.

கலைதுறையினருக்கு வாய்ப்புகள் தேடி வரும்.வெளியூர்,வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்கும்.

உங்களை உதாசீனம் படுத்தியவர்கள் உங்களை தேடி வருவார்கள்.சுபகாரியம் நல்ல படியாக நடக்கும். உறவினர்களின் மனமகிழ்ச்சியை இரட்டிபாக்கும்.

அடுத்ததாக நட்சத்திர பலன் துலாம் ராசி புரட்டாசி மாதம் 2021

சித்திரை 3,4 பாதம்:
இந்த மாதம் வருமானம் அதிகமா இருக்கும்.திருமண பாக்கியம் கைகூடி வரும்.மறைமுக போட்டிகளை சந்திக்கலாம்.

சுவாதி:
இந்த மாதம் பொருளாதாரத்தில் இருந்த சிக்கல் விலகி பணம் சேமிக்க முடியும்.வீட்டிற்கு தேவையான பொருள் வாங்கி மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

விசாகம் 1,2,3ம் பாதம்:
இந்த மாதம் மதிப்பு,மரியாதை அதிகரிப்பதை பார்க்கலாம். பிள்ளைகளின் வழியில் செல்வாக்கு அதிகரிக்கும்.அவர்களோட ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

பரிகாரம் : திருச்செந்தூர் முருகன் வழிபாடு தடைகளை நீக்கி,வெற்றி வாய்ப்பை தரும்.

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *