துலாம் ராசி அக்டோபர் மாதம் ராசிபலன் 2021

துலாம் ராசி அக்டோபர் மாதம் ராசிபலன் 2021

துலாம் ராசி அக்டோபர் மாதம் என்ன நடக்கும் என்று எந்த பதிவில் பார்க்கலாம் .இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்கள் உண்டாகும். அதாவது நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்கள் கிடைக்கும்.

துலாம் ராசி அக்டோபர் மாதம் கிரகநிலை:

 • அக்டோபர் மாதம் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் போது ரிஷப ராசியில் ராகு இருப்பது தொழில் ரீதியாக நல்ல பலன் கிடைக்கும்.
 • மகர ராசியில் குரு பகவான் வக்ர நிலையும், சனி சேர்க்கையும் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்தி தரும்.
 • மேலும் கன்னி ராசியில் சூரியன், செவ்வாய் கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படுகிறது.

https://www.tomorrowhoroscope.com/2021-அக்டோபர்-மாத-ராசிபலன்-ரி/

துலாம் ராசி அக்டோபர் மாதம் குடும்ப நிலை:

 • இந்த மாதம் கணவன் மனைவி இருவருக்கும் இடையே மோதல் ஏற்படும். எனவே இருவரும் அனுசரித்து செல்வது நல்லது.
 • மேலும் தாய் தந்தை உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும்.
 • குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள்.
 • மேலும் உங்கள் வீட்டில் திருமணம்போன்ற சுப காரியங்கள் நடக்க இருப்பதால் விருந்தினர்கள் வருகை இருக்கும். இதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி வழியும்.

https://www.tomorrowhoroscope.com/மிதுனராசி-அக்டோபர்-மாதம்/

துலாம் ராசி அக்டோபர் மாதம் நிதி நிலை:

 • இந்த கால கட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
 • இந்த மாதம் புதிதாக சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
 • மேலும் உங்கள் தொழிலை விரிவுபடுத்த கடன் வாங்க விண்ணப்பம் செய்தவர்களுக்கு இந்த மாதம் அந்த பணம் உங்கள் கைக்கு வரும்.
 • இதனால் உங்கள் பொருளாதார நிலை வளர்ச்சி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை கொடுக்கும்.

துலாம் ராசி அக்டோபர் மாதம்

வேலை:

 • அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உங்கள் வேலையில் நீங்கள் சிறப்பாக செய்து மேல் அதிகாரிகள் முழு பாராட்டையும் பெறுவீர்கள்.
 • மேலும் உங்கள் சிறந்த பேச்சாற்றல் காரணமாக உங்களுக்கு இந்த கால கட்டத்தில் பெயரும் புகழும் கிடைக்கும். இதை தக்க வைத்து கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும்.
 • இந்த மாதம் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்தை விட நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/மேஷ-ராசி-அக்டோபர்-மாத-ராச/

தொழில்:

 • இந்த மாதம் வழக்கம் போல தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம், இறக்கம் இரண்டும் கலந்த பலன் கிடைக்கும். புதியதாக எந்த ஒரு முதலீட்டையும் செய்ய வேண்டாம்.
 • கூட்டு தொழில் செய்பவர்களுக்கு பண விஷயத்தில் மனஸ்தாபம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
 • எனவே வார்த்தைகளை பேசும் போது சற்று கவனமாக பேச வேண்டும்.
 • மேலும் வாடிக்கையாளர்கள் தேவை அறிந்து செயல்பட நல்ல லாபம் கிடைக்கும்.

வியாபாரம்:

 • இந்த கால கட்டத்தில் ஆடை, ஆபரணம் தொழில் செய்து கொண்டு இருப்பவர்கள் நல்ல லாபம் காணலாம்.
 • இந்த நிலையில் உங்களுக்கு புதியதாக ஆர்டர்கள் கிடைக்கும். மேலும் அதிக முதலீடுகளை கொஞ்சம் குறைத்து கொள்ள வேண்டும்.
 • இதன் மூலம் வரக்கூடிய நஷ்டத்தை தவிர்க்கலாம்.
 • மேலும் எந்த ஒரு செயலை செய்யும் முன்பு கவனமாகவும், சற்று நிதானமாகாவும் செயல் பட்டால் வெற்றி பெற முடியும்.
 • வேலை செய்யும் போது வீண் வாக்கு வாதங்கள் செய்வதை தவிர்த்து பெரியவர்கள் ஆலோசனையை கேட்டு நடக்க வேண்டும். இதன் மூலம் நன்மை உண்டாகும்.

https://www.tomorrowhoroscope.com/கடக-ராசி-அக்டோபர்-மாதம்/

ஆரோக்கியம்:

 • எப்போதும் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவு, பழங்கள், கீரை வகைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
 • இதனால் உங்கள் உடலுக்கு நோய் நொடி வராமல் தடுக்கும் சக்தி அதிகரிக்கும்.
 • இந்த கால கட்டத்தில் சிறு உடல் உபாதைகள் வந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.
 • மேலும் தியானம், யோகா, உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி போன்றவைகளை செய்ய உடல் ஆரோக்கமாக இருப்பதோடு மனமும் தெளிவாக இருக்கும்.

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *