துலாம்…தனுசு…மகரம் வார ராசிபலன் OCT 6 முதல் 12 வரை !

துலாம் தனுசு மகரம் வார ராசிபலன் (6.10.2021-
12.10.2021)

இன்று இந்த பதிவில் துலாம் தனுசு மகரம்…இந்த 3 ராசிக்கு அடுத்த 1 வாரம் என்ன நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம்

 • பொதுவாக நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களுமே நமது ஜாதக கிரக நிலைகளை பொறுத்து மாறுபடும். மேலும் தனிப்பட்ட வாழ்க்கை, வேலை வாய்ப்பு,தொழில்,திருமணம் என அனைத்தையும் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
 • மேலும் இந்த வாரம் துலாம், தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

வார ராசிபலன் துலாம் தனுசு மகரம்

துலாம் மகரம் தனுசு வார ராசிபலன்

துலாம்:

 • எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் துலாம் ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு தொழிலில் பண வரவு அதிகரிக்கும்.
 • வாரத்தின் தொடக்கத்தில் நிதி நிலைமை நன்றாக இருக்கும். இதுவரை நிலுவையில் இருந்த பழைய கடனை திருப்பி செழித்துவீர்கள்.
 • உங்கள் நிதி நிலை குறித்த முடிவுகளில் விழிப்புணர்வு வேண்டும். இந்த கால கட்டத்தில் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் சில சவால்களை சந்திக்க நேரிடும்.
 • நீங்கள் தற்காலிகமாக வேலை செய்தால் உங்களுடைய பிரச்சினை அதிகரிக்கும். எனவே சகா பணியாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. மேலும் மனதில் பட்டதை அப்படியே பேசாமல் இடத்திற்கு ஏற்றவாறு பேச வேண்டும்.
 • வணிகர்கள் இந்த வாரத்தில் நல்ல லாபத்தை பெறலாம். ஆடை, ஆபரணங்கள் தொழில் செய்பவர்கள் நல்ல நிதியை பெறலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை முறையை பொறுத்தவரையில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
 • சகோதர சகோதரிகள் உங்களுக்கு உதவ முன் வருவார்கள். கணவன் மனைவி இருவரும் இணைந்து செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இருவருக்கும் இடையே நல்லிணக்கம் காணப்படும். மேலும் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்டு நடந்து கொள்ளவார்கள்.
 • இதனால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். இந்த வாரம் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உங்களுக்கு இந்த கால கட்டம் மிகவும் அதிஷ்டம் அடிக்கும் வகையில் உள்ளது.
 • பாடங்களை முழு முயற்சியுடன் படிக்க வேண்டும்.இதனால் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும்.

https://www.tomorrowhoroscope.com/2021-அக்டோபர்-மாத-ராசிபலன்-ரி/

தனுசு:

 • எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பாக செய்து முடிக்கும் தனுசு ராசி அன்பர்களே,
  நிதி ரீதியாக இந்த வாரம் நன்றாக இருக்கிறது. வாரத்தின் ஆரம்பம் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினை வரலாம்.
 • ஆனால் அதற்கு பிறகு உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கிறது. உங்களுக்கு தீடீர் பண வசதி உண்டாகும்.
 • இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு இந்த வாரம் பண புழக்கம் அதிகமாக இருப்பதால் பணத்தை சரியாக செலவு செய்து,மீதிவுள்ள பணத்தை சேமித்து வையுங்கள்.
 • மேலும் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சமயங்களில் பதற்றம் இருக்கும். அதனை கட்டுப்படுத்த தியானம் செய்ய வேண்டும். மேலும் சின்ன விஷயங்களை பெரியதாக்க வேண்டாம்.
 • குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் விட்டு கொடுத்து செல்லுங்கள். விட்டு கொடுத்தால் கெட்டு போவதில்லை.

https://www.tomorrowhoroscope.com/மேஷ-ராசி-அக்டோபர்-மாத-ராச/

மகரம்:

 • எந்த ஒரு செயலையும் யோசித்து செய்யும் மகரம் ராசி அன்பர்களே,
  இந்த கால கட்டத்தில் வேலைக்காக வெளி நாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு நல்ல முடிவை பெறலாம். இந்த வாரம் நீங்கள் வங்கி தொழில் செயபவர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கும்.
 • வியாபாரம் செயபவர்களுக்கு ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். மேலும் உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு கை கொடுக்கும். உங்கள் வேலையில் சில பிரச்சனைகள் ஏற்படும்.
 • ஏதாவது ஒரு வேலை பாதியில் நிக்கலாம்.இதனால் நிதி பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
 • மேலும் இந்த கால கட்டத்தில் ஒரு புதிய தொழிலை தொடங்க விரும்பினால் சற்று யோசித்து செய்ய வேண்டும்.
 • அதாவது எந்த வேலை செய்யும் போது சிறுது கால தாமதம் ஏற்படும். எனவே பொறுமையாக செய்ய வேண்டும்.
 • இதனால் நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும். தனிப்பட்ட வாழ்க்கையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள்.
 • மேலும் இந்த கால கட்டத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். அதாவது உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறகூடிய வாய்ப்பு உள்ளது.
 • ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு நரம்பு தொடர்பாக பிரச்சினை வரலாம்.எனவே உணவு விஷயத்தில் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *