துலாம் குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

துலாம் குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022:

துலாம் குருபெயர்ச்சி பலன்கள்…இந்த ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கை இனிவரும் காலங்களில் எப்படி இருக்கும் என்கின்ற ஜோதிட கணிப்பை பார்க்கலாம்.

 • எண்ணம் போல செயல்படும் துலாம் ராசி அன்பர்களே!மகர ராசியில் அமர்ந்து உங்கள் ராசியை 4ம் இடமாக அதாவது அர்த்தாஷ்டம குருவாக தொல்லைகளை கொடுத்த பகவான் 20.11.2021 முதல் கும்ப ராசிக்கு மாறுகிறார்.
 • உங்கள் ராசியை பொறுத்தவரை 5ம் வீட்டில் கும்பராசியில் குரு சஞ்சரிப்பார்.குரு பார்வை பட்டாலே நமது ஜாதகத்த்தில் பலன் அதிஷ்டங்களை அனுபவிக்க முடியும்.
 • அந்த வகையில் 5இல் குரு மிக சிறந்த யோகத்தை கொடுக்க இருக்கிறது.
 • 5இடத்து குரு என்ன செய்ய போகிறார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

துலாம் குருபெயர்ச்சி பலன்கள்

குருவின் பலம்:

 • நான்காம் இடத்து குருவாக மனம் ரீதியாகவுன் உடல் ரீதியாகவுன் கஷ்டங்களை கொடுத்து கொண்டிருந்தார்.எதிலும் தடை மட்டுமே இருந்திருக்கும்.
 • ஆனால் 5ம் இடத்து குரு எடுக்கும் அனைத்து செயல்களிலும் உங்களுக்கு வெற்றியை தர போகிறார்.
 • நினைக்கும் காரியங்கள் எளிதில் நடந்து முடியும்.
 • ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
 • 9ம் பார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் அதிஷ்டம் கிடைக்கும் அதாவது தொழிலில் முன்னேற்றம்,குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவை ஏற்படும்.

https://www.tomorrowhoroscope.com/கன்னி-குருபெயர்ச்சி/

வேலையில் நிம்மதி:

 • அலுவலகத்தில் பணி புரிபவர்கள் அவர்களுக்கு இருந்த அனைத்து சங்கடங்களையும் சமாளித்து இனிமே வெற்றி நடை போடலாம்.பலவிதமான சோதனைகளுக்கு ஆட்பட்டிருப்பீர்கள் .
 • இப்போது அந்த நிலை மாறி நிம்மதியாக பணியாற்ற முடியும்.
 • கிடைக்காமல் தள்ளி போன பதிவு உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.
 • உங்கள் மீது விழுந்த பழியை நிருப்பித்து காட்டுவீர்கள்.
 • இதனால் மதிப்பு,மரியாதை கிடைக்கும்.புதிய தொழிலை தொடங்கலாம் .

லாபம் அதிகரிக்கும்:

 • செய்யும் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.
 • கடந்த காலங்களில் இருந்த தேக்க நிலை மாறி விறுவிறுப்பாக வியாபாரம் சூடுபிடிக்கும்.
 • வராமல் இருந்த பாக்கிகள் கைக்கு வரும்.
 • தன்னம்பிக்கை அதிகரித்து துணிச்சலுடன் செயல்களை செய்வீர்கள்.
 • அக்கம் பக்கம் இருப்பவர்களிடன் உங்கள் தொழில் ராகசியங்களை பகிர வேண்டாம்.
 • உங்கள் வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால் இப்போது மாற்றி கொள்ளலாம்.

துலாம் குருபெயர்ச்சி பலன்கள்  மாணவர்கள்:

 • கல்வியில் ஒரு தடுமாற்றம்,பயம் இருந்திருக்கும்.அவை அனைத்தும் நீங்கி எதிலும் ஒரு முன்னேற்றம் ஏற்படும்.
 • நிறைய மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவீர்கள்.
 • பெரியவர்களின் ஆலோசோனை எதிர்காலத்திற்கு நல்லது.
 • வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்ற கனவு நனவாகும்.
 • படித்து முடித்து வேலைக்கு எவ்வளவு முயற்சி பண்ணாலும் வேலை கிடைக்கலனு வருத்த பட்டுக்கொண்டிருக்கும் இளஞர்களுக்கு மனதிற்கு திருப்தியான வேலை கிடைக்கும்.

அரசியலுக்கு ஏற்ற காலம்:

 • அரசியலில் நினைத்தது எதுவும் நடக்காமல் வருத்தத்தில் இருக்கும் துலாம் ராசி நேயர்களுக்கு அரசியலில் ஜொலிக்க போறீர்கல்னு சொல்லலாம்.
 • நீங்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
 • மக்கள் பணியில் பிரகாசமாக இருப்பீர்கள்.
 • அரசால் அனுகூலம் சிறப்பாக கிடைக்கும்.பயணங்கள் நிறைய மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
 • திடீர் அதிஷ்டம் கதவை தட்டும்.

https://www.tomorrowhoroscope.com/சிம்மம்-குருபெயர்ச்சி-பல/

துலாம் குருபெயர்ச்சி பலன்கள்  ஆரோக்கியம்:

 • இதுவரை உடல் ரீதியாக இருக்கும் இன்னல்கள் அனைத்தும் குறைந்து காணப்படும்.
 • மருத்துவ செலவுகள் குறைந்து காணப்படும்.
 • சின்ன சின்ன கோளாறுகள் கூட சரியாகி விடும்.
 • சுறுசுறுப்பாகவும் உற்சகமாகவும் காட்சி அளிப்பீர்கள்.
 • முகத்தில் ஒரு பொலிவு தெரியும்.
 • எதிலும் துணிச்சல் ஏற்படும்.மனதிற்கு பிடித்த உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

பரிகாரம்:

சிவன் வழிபாடு செய்வது முன்னேற்றத்திற்கு நல்லது.ரோஜா பூ மாலை சாற்றி வழிபாடு செய்வது தடைகளை போக்கும் சக்தி கொண்டது.

கடகம் குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *