தனுசு நவம்பர் மாத ராசிபலன் 2021

தனுசு நவம்பர் மாத ராசிபலன் 2021

தனுசு நவம்பர் மாத ராசிபலன் 2021 இந்த மாதம் உங்களுக்கு என்ன நடக்கும்னு இந்த பதிவில் பார்க்கலாம்.

  • நவம்பர் மாதம் சூரியன் துலாம்,விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.
  • துலாம் ராசியில் நீச்ச பங்க நிலையில் இருக்கும் சூரியன் மாதத்தின் நடுவில் விருச்சிக ராசிக்கு செல்ல இருக்கிறார்.
  • சூரியன் ,கேதுவுடன் கால புருஷனுக்கு 8ஆம் வீட்டில் செவ்வாய் அமர்வது அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும்.
  • இந்த மாதம் குரு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்.
  • நவ கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் கூட்டணி பார்வையால் தனுசு ராசிகாரர்களுக்கு யோகங்களும் அற்புதங்களும் நடக்க இருக்கிறது.

நவம்பர் மாத கிரகநிலை

  • நவகிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷப ராசியில் ராகு, 6ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய்,புதன் சஞ்சாரம் ஏற்படும்.
  • 7ஆம் வீட்டில் கேது,8ஆம் வீட்டில் சுக்கிரன்,9ஆம் வீட்டில் சனி குரு சேர்க்கை என கிரகங்களின் சஞ்சாரம் நிகழ்கிறது.
  • மாத பிற்பகுதியில் புதன்,சூரியன் இடப்பெயர்ச்சி ஆகி 7ஆம் வீட்டில் உள்ள கேதுவுடன் இணைகிறார்.
  • 9ஆம் வீட்டில் குரு 10ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.

https://www.tomorrowhoroscope.com/விருச்சிகம்-நவம்பர்-மாதம/

தனுசு நவம்பர் மாத குடும்ப நிலை

  • இந்த மாதம் குடும்பத்தில் இதுநாள் வரை தடைபட்ட சில காரியங்கள் இனிதே நடைபெறும்.
  • அதாவது மண வயதை அடைந்தவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த நல்ல வாழ்க்கை துணை அமையும்.
  • சிலருக்கு சிறப்பான குழந்தை பாக்கியம் உண்டாகும்.
  • இந்த மாதம் புதிய வீடு,மனை வாங்கும் எண்ணம் மேலோங்கும்.
  • இதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • கணவன் மனைவி இடையே இருந்த மனஸ்தானங்கள் நீங்கி சண்டை சச்சரவுகள் இல்லமால் அன்பாக இருப்பீர்கள்.
  • இதன் மூலம் உங்கள் குழந்தைகள் நலனில் அதிக அக்கறை எடுத்து கொண்டு நடந்து கொள்வீர்கள்.

https://www.tomorrowhoroscope.com/துலாம்-நவம்பர்-மாத-ராசிப/ ‎

தனுசு நவம்பர் மாத தொழில்

  • இந்த மாதம் தொழில் சம்பந்தமாக சிலருக்கு தொலைதூரத்திலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.
  • மேலும் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் உங்களது பழைய கடன்கள் அடைபடும்.
  • சிலர் புதியதாக வண்டி,வாகனம் வாங்க முடியும்.
  • இதன் மூலம் வீட்டில் புதிய நவீன சேர்க்கை அதிகரிக்கும்.
  • மேலும் வெளி வட்டார தொடர்புகள் மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

வியாபாரம்

  • இந்த மாதம் வியாபாரம் செய்ப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த போட்டி பொறாமைகள் நீங்கும்.
  • அதாவது இந்த மாதம் வியாபாரிகளுக்கு நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும்.
  • அதாவது பண்டிகை கால கட்டம் என்பதால் வாடிக்கையாளர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
  • மேலும் ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள்.
  • வியாபாரத்தை விரிவு படுத்த நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண வரவு இருக்கும்.இதன் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீ ர்கள்.

https://www.tomorrowhoroscope.com/கன்னி-நவம்பர்-மாத-ராசிபல/

மாணவர்கள்

  • கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த மாதம் ஒரு சிறப்பான கால கட்டமாக இருக்கிறது.
  • நீங்கள் எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.
  • போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் முழு மூச்சுடன் படித்தால் கண்டிப்பாக தேர்வில் வெற்றி பெற முடியும்.
  • அதாவது உங்களுடைய உழைப்பு என்றைக்குமே வீண் போகாது என்பதை மனதில் கொண்டு தன்னம்பிக்கையோடு படிக்க முயலுங்கள்.வெற்றி நிச்சயம்.

ஆரோக்கியம்

  • சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
  • பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கிறது.
  • பொதுவாக நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் அலைச்சல் மற்றும் டென்ஷன் குறையும்.
  • மேலும் பொருளாதார நிலை சிறப்பாக அமைவதால் உங்கள் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி நீங்கள் சந்தோசமாக இருக்க முடியும்.

வியாழக்கிழமை தோறும் குரு பகவானை மஞ்சள் வஸ்த்திரம் சாற்றி ,கொண்ட கடலை மாலை அனுவித்து வழிபட உங்களுது கஷ்டங்கள் நீங்கி சுகம் உண்டாகும்.

கடகம் நவம்பர் மாத ராசிபலன் 2021

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *