சிம்ம ராசி புரட்டாசி மாத ராசிபலன் 2021

சிம்ம ராசி புரட்டாசி மாத ராசிபலன் 2021 :

 • சாதிக்கத்துடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே இந்த புரட்டாசி மாதம் முழுவதும் என்னென்ன சுவாரசியமான விஷயங்கள் கண்களுக்கு நடக்க உள்ளது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

புரட்டாசி மாத கிரகநிலை :

 • சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிப்பார் அந்த வகையில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கக்கூடிய மாதம் தான் இந்த புரட்டாசி மாதம் ஆகும்.
 • கன்னி ராசி புதன் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் இந்த மாதத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் இணைந்து பயணம் செய்வது சிறப்பான ஒரு விஷயமாக ஜோதிடத்தில் அமைந்துள்ளது.
 • ரிஷபத்தில் ராகு,துலாமில் சுக்கிரன்,விருச்சிகத்தில் கேது,மகரத்தில் குரு சனி, என கிரகங்கள் அனைத்தும் இந்த மாதத்தில் சஞ்சாரம் செய்கின்றன.

சிம்மம் ராசி கிரக நிலை :

 • இந்த புரட்டாசி மாதத்தில் சிம்ம ராசிகான கிரகநிலை குடும்ப ஸ்தானத்தில் குரியன்,செவ்வாய்,புதன் தைரிய ஸ்தானத்தில் சுக்கிரன், தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக சஞ்சாரம் செய்ய உள்ளனர்.

சிம்ம ராசி புரட்டாசி மாத பலன்கள் :

 • எதையும் சாதித்து வெல்லக்கூடிய சிம்ம ராசிக்கு இந்த மாதம் நிறைய அற்புதங்கள் நல்ல விஷயங்களாக நடக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும்.
 • வீடு வாகனம் வாங்கக்கூடிய யோகநிலையும் உங்களுக்கு சிறப்பாக இருக்கிறது.
 • நினைத்தது நடக்கும் மாதமாக புரட்டாசி மாதம் அமையும்.பணவரவு அமோகமாக இருக்கும்.புதிய வாய்ப்பு தேடி வரும்.ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மராசியினர் தொழில் வாழ்க்கை:

 • இத்தனை நாள் இழுபறியாக இருந்து வந்த வேலைகளை விரைவில் முடித்து காட்டுவீர்கள்.உங்களின் திறமையானது வெளிப்படும்.நீங்க வேலை செய்யக்கூடிய இடத்தில் உங்களை புகழ்ந்து பேசுவார்கள்.
 • உங்களின் சொல்வாக்கு செல்வாக்கு உயரும் காலமாக இது உங்களுக்கு அமைந்துள்ளது.
 • உங்களின் திறமை வெளிப்பட்டு உயரதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள்.

வியாபாரம் :

 • வியாபாரத்தில் புதிய உத்தியை கையாண்டு லாபத்தை பெருகுவீர்கள். வியாபாரத்தில் சிறு மாற்றம் செய்துட்டுவாங்க அது உங்களுக்கு லாபத்தை தரக்கூடிய வகையில் இருக்கும்.
 • உங்களின் வாடிக்கையாளரிடம் கனிவாக பேசி பழகுங்கள். அதே போல இந்த இந்த காலகட்டத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்கினால் உங்களுக்கு லாபம் கிடைக்கும்

வருமானம்:

 • தொழில் வாழ்க்கை தற்போது காட்டிலும் இனி வருகின்ற நாட்களில் முன்னேற்றம் அடைவதால் வருமானம் அதிகரிக்கும்.
 • சேமித்து வைங்க பிற்காலத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கும்.அதேபோல வரவுக்கு ஏற்ப செலவு செய்வதை உங்களின் வாழ்க்கையில் பழகிகொள்ளுங்கள்.
 • வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படக்கூட வாய்ப்புகள் இருக்கிறது.அதனால் சேமித்து வைப்பது நல்லது.

சிம்ம ராசி புரட்டாசி மாதம்

 

குடும்ப வாழ்க்கை :

 • உறவினரிடம் இருந்து வந்த கனகசப்புகள் நீங்கும்.உங்களுக்கு இப்போது அவர்கள் உதவியாக இருப்பார்கள்.கணவன் மனைவி இடையே அன்பானது அதிகரிக்கும்.
 • ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து புரிந்து கொள்வீர்கள்.அதனால் உறவானது வலுவாகும்.ஆடை ஆபரணங்கள் வாங்கி தந்து இன்ப அதிர்ச்சி கொடுப்பீங்க.
 • புதிய வண்டி வாகனம் வாங்கி செல்வ செழிப்போடு இருப்பீங்க.மனக்கவலை நீங்கி மனநிம்மதி கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/மகரம்-புரட்டாசி-மாத-ராசி/

ஆரோக்கியம் :

 • உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.குறிப்பாக பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
 • சின்ன பிரச்சனை என்றாலும் அதற்கு உரிய சரியான மருத்துவரை பெற்றோர்கள் அணுக வேண்டும்.மருத்துவ செலவு வரும்.
 • குழந்தைகள் நலனில் அக்கறையாகவும் ஜாக்ரதையாகவும் இருங்க. அதோடு தொற்று பரவும் அபாயம் உள்ளதால் எல்லோருமே ஜாக்கிரதையாக விழிப்புணர்வுடன் இருந்துட்டுவாங்க.

மாணவர்களின் கல்வி :

 • படிக்கக்கூடிய சிம்ம ராசி மாணவர்கள் நல்ல முயற்சியை செலுத்திட்டு வந்தால் நீங்க எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்ணை பெறலாம்.
 • சகமாணவர்களுடன் பழகும் போது கவனமாக இருக்க வேண்டும் வாக்குவாதமே பெரிய பிரச்சனையாக மாற ஆரம்பமாகிடும்.விளையாட்டு துறையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

https://www.tomorrowhoroscope.com/துலாம்-ராசி-புரட்டாசி-மா/

வழிபாடு :

 • சனிக்கிழமைத்தோறும் பெருமாளை மாலை நேரத்தில் சரியாக 6 மணியில் இருந்து 6.30 மணி வரையிலான இந்த நேரத்தில் பெருமாளை வழிபட ஆரோக்கியத்தில் வரக்கூடிய பிரச்சினை குறையும்.
 • ஆயுள்,ஆரோக்கிய பலமானது கிடைக்கும்.
  அதேபோல வியாழக்கிழமைதோறும் குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபாடு செய்து வருவதால் தொழிலானது மேலும் மேலும் விருத்தியாகும்.

 

கிஜ்அதிர்ஷ்ட கிழமைகள் :
புதன்கிழமை,வியாழக்கிழமை, சனிக்கிழமை.
அதிர்ஷ்ட தேதி எண் :
அக்டோபர் 3,7,16

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *