சிம்மம் குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

சிம்மம் குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022:

சிம்மம் குருபெயர்ச்சி பலன்கள்…இந்த ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கபோகிறது என்கின்ற துல்லிய ஜோதிட கணிப்பு!!

 • எதிலும் தலைமை குணம் கொண்டு திறமையாக செயலாற்றும்  சிம்ம ராசி அன்பர்களே!மகர ராசியில் அமர்ந்து உங்கள் ராசியை 6ம் இடது கஷ்டங்களை கொடுத்து கொண்டிருந்த குரு பகவான் 20.11.2021 முதல் கும்ப ராசிக்கு மாறுகிறார்.
 • உங்கள் ராசியை பொறுத்தவரை 7ம் வீட்டில் இடமான கும்பராசியில் குரு சஞ்சரிப்பார்.
 • இதனால் நல்ல பலன் மற்றும் அதிஷ்டங்களை அனுபவிக்க முடியும்.
 • அந்த வகையில் 9இல் குரு மிக சிறந்த யோகத்தை கொடுக்க இருக்கிறது.
 • வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

சிம்மம் குருபெயர்ச்சி பலன்கள்

பொது பலன்கள்:

 • குடும்பத்தில் மதிப்பு அதிகமாகும்.
 • நிகழ்ச்சிகளில் மாலை, மரியாதை கிடைக்கும்.பெரிய மனிதர் களின் சந்திப்பு இழந்த மதிப்பை மீட்டு தரும்.
 • விலகி சென்ற உறவுகள் விரும்பி வருவார்கள்.
 • எதிலும் தடை, சங்கடம் என்கின்ற நிலை மாறி அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.

https://www.tomorrowhoroscope.com/கடகம்-குருபெயர்ச்சி-பலன்/

நிதியில் அதிஷ்டம்:

 • குரு பகவான் லாப வீட்டை பார்ப்பதால் எந்த காரியம் தொட்டாலும் துலங்கும்.
 • ஆடை, ஆபரண வாங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
 • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.உடன் பிறந்தவர்கள் முழு ஆதரவும் தருவார்கள்.
 • பங்கு சந்தை முதலீடு நல்ல லாபத்தை கொடுக்கும்.
 • கூட்டு தொழில் செய்து வந்தால் இனி தனியாக தொழில் தொடங்கும் நேரம் கூடி வந்திருக்கிறது.
 • வெளிநாடு வர்த்தகம் பணவரவை மேம்படுத்தி கொடுக்கும்.
 • சிறுகுறு தொழிலில் பழைய சரக்குகளை விற்று லாபம் பார்ப்பீர்கள்.

மாற்றங்கள் நிறைந்த காலம்:

 • புதிய வீடு கட்டும் கனவு நனவாகும்.
 • பழைய சொத்தை நல்ல விலைக்கு விற்று விரும்பிய மாற்றங்களை ஏற்படுத்தி கொள்வீர்கள்.
 • பேச்சில் அன்பு அதிகரிக்கும்.
 • உறவுகளிடம் இதுவரை கிடைக்காத பாசம்,நீங்கள் கொடுத்ததை விட இரண்டு மடங்கு கிடைக்கும்.

சுப பலன்கள் கிடைக்கும்:

 • வீட்டில் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
 • உறவுனர்களின் வருகை ஆறுதலையும்,சந்தோஷத்தையும் கொடுக்கும்.
 • பெரிய திட்டங்களை துணிச்சலுடன் எடுப்பீர்கள்.
 • எதிர்பாலினத்தை சேர்ந்த மக்களால் லாபம் கிடைக்கும்.
 • சின்ன சின்ன விசியங்கள் கூட பெரிய நன்மையை கொடுக்கும்.
 • எது எல்லாம் கிடைக்கவில்லை என்று வருத்தபடீர்களோ அது கைமேல் கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/மிதுனம்-குருபெயர்ச்சி-பல/

சிம்மம் குருபெயர்ச்சி பலன்கள் மாணவர்கள் :

 • கல்வியில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும்.
 • படிப்புக்கு முதலிடம் கொடுத்து நன்றாக படித்து மதிப்பெண் பெறுவீர்கள்.
 • சுற்றுலா ,கல்வி நிறுவனங்கள் சென்று பார்க்கும் பயணம் ஏற்படும்.
 • ஆசிரியர்களின் சொல்படி நடப்பது எதுர்காலத்திற்கு நல்லது.பெற்றோருக்கு உங்களால் மரியாதை கிடைக்கும்.
 • விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி அடைவீர்கள்.
 • உங்களை பற்றி அவதூறு கூறியவர்கள் தானாகவே விலகி விடுவார்கள்.

சிம்மம் குருபெயர்ச்சி பலன்கள் கலைஞர்கள்:

 • கலைஞர்களுக்கு மிக சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பார்.
 • உங்களுக்கு வரும் வாய்ப்பை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
 • எதிர்காலத்திற்கு நல்லதா இருக்கும்.பணவரவு கணிசமாக உயரும்.
 • திறமைகளால் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
 • உங்களின் மீது சுமத்திய பழி சொல்,அவச்சொல் நீங்கும்.
 • நல்ல முன்னேற்றம் பார்க்கலாம்.
 • இதுவரை பட்ட கஷ்டத்திற்கு விடுவுகாலம் வந்துவிட்டது.

ஆரோக்கியம்:

 • உடல்நிலையில் நல்ல மேன்மை உண்டாகும்.
 • மருத்துவ செலவுகள் குறைந்து காணப்படும்.
 • எதிலும் சுறுசுறுப்பாக இல்லாமல் கலை இழந்து காணப்பட்ட நீங்கள் இனி பொலிவுடன் இருப்பீர்கள்.
 • தந்தையின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 • யோகா செய்வதால் மனதுற்கு இதமாக இருக்கும்.

பரிகாரம்:

அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கு அடிக்கடி சென்று வரவேண்டும்.குரு பகவானுக்கு வியாழக்கிழமை மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்தால் மேலும் நன்மைகள் கிடைக்கும்.

ரிஷபம் குருபெயர்ச்சி பலன்கள் 2021 to 2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *