கும்ப ராசி – புரட்டாசி மாத ராசிபலன் 2021

புரட்டாசி மாத ராசி பலன் 2021,கும்பம் ராசி :

கும்ப ராசி கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு !!!

 • எதையும் யோசித்து பார்த்து முடிவு எடுப்பதில் வல்லவரான கும்ப ராசி நேயர்களே ,இந்த புரட்டாசி மாதம் நீங்கள் நினைத்த காரியம் தடையின்றி வெற்றிகரமாக நடக்கும்.பணவரவு எதிர்பார்த்தபடி நன்றாகவே இருக்கும்.
 • எதையும் ஆலோசித்த பிறகே முடிவு எடுப்பீர்கள்.இதனால் எந்த ஒரு பிரச்சனையும் உங்களுக்கு வராது.வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பே கிடைக்கும்.

கிரக சேர்க்கை:

 • இந்த மாதம் உங்களுடைய ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் கேது இருப்பதால் ,எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் வரலாம்.இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமா செய்து முடிப்பீர்கள்.
 • சுக ஸ்தானத்தில் ராகு இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு காணப்படும்.அஷ்டம ஸ்தானத்தில் சூரியன்,செவ்வாய், புதன்(வ) பெற்று கிரகங்கள் கும்ப ராசியை வலம் வருகிறது.

கும்ப ராசி தொழில்:

 • பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சாரம் தொழில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.தொழில் பார்ட்னர்களின் மூலியமாக தொழிலை விரிவாக்கம் பண்ணலாம்.
 • உத்தியோகத்தில் பணிபுரிப்பவர்களுக்கு உங்களை திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டை பெறுவீர்கள்.
 • உடன் பணி புரிப்பவர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும்.பதிவு உயர்வு,ஊதிய உயர்வு கிடைக்கும்.

கும்ப ராசி வாழ்க்கை:

 • இந்த மாதம் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.தள்ளிப்போன திருமணம் நல்லபடியா நடந்துமுடியும்.
 • பெண்களுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பொருளாதாரம் நல்ல படியாக இருக்கும்.
 • சகோதர, சகோதரிகள் சண்டை சச்சரவு வந்தாலும், பாசம் குறையாது.

https://www.tomorrowhoroscope.com/புரட்டாசி-மாத-ராசிபலன்-2021-த/

கும்ப ராசி நிதி நிலை:

 • கொடுக்கல்,வாங்கல் நன்றாக இருக்கும். வரவேண்டிய பணம் வீடு தேடி வரும்.
 • கடன் கிடைகிறதுனே அதிகமாக வாங்க வேண்டாம்.தொழில் முதலீடு செய்யலாம்.வண்டி , வாகனம் யோகமும் உண்டு.
 • நிலம்,வீடு கட்டும் பணி வாய்ப்பும் கிடைக்கும்.

கலைஞர்கள்:

 • இயல்,இசை துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் வீடு தேடிவரும்.
 • ரியல் எஸ்டேட் துறையில்
  இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
 • எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு அரசால் அனுகூலம் ஏற்படும்.நாடக துறையில் இருப்பவர்களுக்கு உங்களோட திறமை பளிச்சிடும்.
 • இதனால் நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். ஆவணங்களில் கையொப்பமிடும் முன்பு மட்டும் நன்றாக சரி பார்த்து கையொப்பம் இடுங்கள்.

https://www.tomorrowhoroscope.com/மீனம்-புரட்டாசி-மாத-ராசி/

மாணவர்கள்:

 • கல்வியில் நல்ல முன்னேற்றம் தெரியும்.படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.
 • ஆசிரியர், பெற்றோர் அறிவுரை கேட்டு நடக்கணும்.விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.
 • மேற்படிப்பு படிக்கும் யோகம் கைகூடி வந்துள்ளது.

கும்ப ராசி நட்சத்திரம் :

அவிட்டம் 3,4பாதம்:

 • இந்த மாதம் நிறைய ஆன்மீகம் பயணம் செல்ல நேரிடலாம்.
 • தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும்.சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது,களவு போக வாய்ப்பு இருக்கு.விலகி போனவர்கள் விரும்பி வருவார்கள்.
 • பூர்வீக சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும்.

சதயம்:

 • இந்த மாதம் உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
 • கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் விலகும்.வேளையில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.ஒரு சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் பெறுவீர்கள்.

பூரட்டாதி 1,2,3 பாதம்:

 • இந்த மாதம் குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள்.புகழ் செல்வாக்கு அதிகரிக்கும். தொழில் எதிரிகள் விலகுவர்கள்.
 • சுபசெலவுகள் அதிகரிக்கும்.வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.அரசால் அனுகூலம் உண்டாகும்.பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும்.

வழிபாடு:

 • அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு தீபம் ஏற்றி,மல்லிகை மாலை சாற்றி வழிபட துன்பங்கள் குறையும்.கரியதடை விலகும்.
 • குலதெய்வ வழிபாடு வாழ்க்கையில் முன்னேற பெரும் உதவியாக இருக்கும்.

அதிஷ்ட நாள்:
திங்கள், வெள்ளி,சனி
அதிஷ்ட நிறம்:
மஞ்சள்,வயலட்,சந்தனம்.
சந்திராஷ்டம நாள்:
அக் 5,6,7.

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *