கும்பராசி அக்டோபர் மாதம் ராசிபலன் 2021

கும்பராசி அக்டோபர் மாதம் ராசிபலன் 2021:

கும்பராசி அக்டோபர் மாதம் ராசிபலன் 2021..கும்ப ராசிக்கு அதிஷ்டமா?? ஆபத்தா?? என்று இந்த பதிவில் பார்க்கலாம்…

 • துணிந்து செயல்பட்டு, முடிவுகளை தீர்க்கமாக எடுக்கும் கும்பராசி அன்பர்களே!!
 • அக்டோபர் மாதம் உங்களுக்கு பயணங்களால் சில செலவுகள் ஏற்படும்.
 • தொழிலில் முதலீடு செய்யவதை தவிர்க்கனும். எதிர்பார்ப்புகள் நிறைவேற தடை,தாமதம் ஏற்படும்.
 • சுபநிகழ்ச்சிகள் குறித்த முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுவது நல்லது.

கிரக சேர்க்கை:

 • இந்த மாதம் கிரங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நான்காம் வீட்டில் ராகுவும்,எட்டாம் வீட்டில் சுக்கிரன்,செவ்வாய்,புதன் சேர்க்கை ஏற்படுகிறது.
 • விரைய ஸ்தானத்தில் குரு, சனியும் பயணம் செய்கின்றனர்.இதனால் காதல் வாழ்க்கையில் பிரிவினைகள் வரலாம்.
 • கணவன்,மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படும்.விட்டுக்கொடுத்து போவது தான் நல்லது.

குடும்பம்:

 • இந்த மாதம் குடும்ப உறுப்புணர்கள் வழியில் சில சங்கடங்கள் வரலாம்.
 • அனைவரும் அமர்ந்து மனம்விட்டு பேசினால் பிரச்சனை சரியாகும்.
 • சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
 • உறவுனர்களின் வருகையால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

https://www.tomorrowhoroscope.com/நாளைய-ராசிபலன்-13-10-2021

நிதிநிலை:

 • பொருளாதாரம் நன்றாக இருக்கும்.இருந்தாலும் வரவுக்கேற்ற செலவு இருக்கும்.
 • சேமிப்பு கொஞ்சம் கடினம்தான்.கொடுக்கல், வாங்கல் விசியங்களில் மிகுந்த கவனம் வேண்டும்.
 • யாரை நம்பியும் ஜாமின் கையெழுத்து போடக்கூடாது.

மாணவர்கள்:

 • பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்கள் கடினமாக படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்.
 • பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.இதனால் படிப்பில் கவனசிதரல்கள் ஏற்படும்.
 • ஒரு சிலருக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
 • பெரியோர்களின் பேச்சை கேட்டு நடப்பதை நல்லது.

கும்பராசி அக்டோபர் மாதம் கலைஞர்கள்  :

 • இந்த மாதம் வாய்ப்புகள் கைவிட்டு போகலாம்.இதனால் மனஉழைச்சலுக்கு ஆளாக நேரிடலாம்.
 • நடப்பது நன்மைக்கேனு எடுத்து கொள்வதே சிறந்தது.
 • உங்கள் முயற்சிக்கேற்ற அங்கிகாரம் நிச்சியம் கிடைக்கும்.
 • அதிகமான பணிச்சுமை காணப்படும்.
 • இசை,நாடக துறையில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
 • வருமானம் பெருகி சேமிக்கவும் முடியும்.

கும்பராசி அக்டோபர் மாதம் ஆரோக்கியம்:

 • ஆரோக்கியம் மேம்பட்டு காணப்படும்.
 • சளி,காய்ச்சல் போன்ற சின்ன சின்ன உடல் உபாதைகள் வந்து போகும்.பெரிய அளவில் எந்த பாதிப்பும் வராது.
 • இருந்தாலும் வயதானவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
 • யோகா, உடற்பயிற்சி மேற்கொள்வது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

https://www.tomorrowhoroscope.com/மகர-ராசி-அக்டோபர்-மாதம்

கும்பராசி அக்டோபர் மாதம் அரசியல்:

 • அரசியல்வாதிகள் மேடை பேச்சுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
 • கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் கூட போகலாம்.இதனால் பெயர்,புகழ் பாதிக்கப்படும்.
 • முடித்த அளவுக்கு பொறுமையாகவும், அமைதியாகவும் இருப்பதே நல்லது.
 • அரசால் நடக்க வேண்டிய காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.
 • எதிர்பாலினவரிடம் பேசும்போது வார்த்தைகளில் விழிப்புணர்வு வேண்டும்.

அவிட்டம் 3,4 பாதம்:

 • இந்த மாதம் தொழில் துறையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும்.
 • பணிபுரிவர்கள் பணியில் ஏமாற்றம் அடைவீர்கள்.
 • பெண்களுக்கு ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும்.
 • மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும்.
 • புது பொலிவுடன் காணப்படுவீர்கள்.

சதயம்:

 • இந்த மாதம் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
 • மகிழ்ச்சி பொங்கும் வகையில் பழைய நண்பர்களை சந்தித்து மனவிட்டு பேசுவீர்கள்.
 • பூர்விக சொத்து சமந்தப்பட்ட பிரச்சனை முடிவுக்கு வரும்.
 • முறையான ஓய்வு எடுத்து கொள்வது உடலுக்கு சிறந்தது.

பூரட்டாதி 1,2 பாதம்:

 • இந்த மாதம் கல்வி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுத்து அதை செயல்படுத்தியும் காட்டுவீர்கள்.
 • திருமணம் தொடர்பாக சற்று யோசித்து முடிவு எடுக்கவேண்டும்.
 • ஒரு சிலருக்கு கிரகங்கள் வலுவாக இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
 • பணவர்த்து மேம்பட்டு காணப்படும்.

https://www.tomorrowhoroscope.com/விருச்சிகம்-ராசி-அக்டோபர/

வழிபாடு:

 • திங்கள் கிழமை தோறும் சிவன்கோவிலுக்கு சென்று ரோஜாப்பூ மாலை சாற்றி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நடக்கும்.
 • குலதெய்வ வழிபாடு உங்களுக்கும், குடும்பத்திற்கும் தடை தாமதம் நீங்கி வெற்றியை பெற்று தரும்.பொறுமையுடன் இருந்தால் சுபிட்சம் உண்டாகும்.

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *