கன்னி குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

கன்னி குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

கன்னி குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022 இந்த ஆண்டு குருபெயர்ச்சியின் விளைவாக உங்களுக்கு என்ன நடக்கும்னு ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளதை இந்த பதிவில் பார்க்கலாம்.

 • இந்த ஆண்டு குருபகவான் திருக்கணித பஞ்சாங்க படி நவம்பர் 20 ஆம் தேதி சனிக்கிழமை அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடபெயர்ச்சி ஆக உள்ளார்.

கன்னி குருபெயர்ச்சி பலன்கள்

பொதுப்பலன்கள்:

 • இதுவரை உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தில இருந்த குரு தற்போது 6ஆம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார்.
 • குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 10,12,2 ஆகிய இடங்களில் படுவதால் ஏராளமான நன்மைகள் நடைபெறும்.
 • உங்கள் ராசிக்கு குரு 4,7க்கு உடையவர் அவர் 6ல் மறைகிறார்.
 • இது அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
 • இருப்பினும் குருபகவானின் 10,12,2 இடங்கள் பார்வையால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
 • ஒரு சிலருக்கு குரு பார்ப்பதால் வெளி நாட்டு வேலையும் கிடைக்க வாய்ப்புள்ளது.
 • 2ஆம் இடத்தை குரு பார்ப்பதால் குடும்பம் விருத்தி பெரும்.
 • இதன் மூலம் தான வசதி பெரும்.உங்கள் வார்த்தைக்கு மதிப்பும்,மரியாதையும் கூடும்.நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

கன்னி குருபெயர்ச்சி பலன்கள் குடும்ப நிலை:

 • உங்களது சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னேற முடியும்.
 • மற்றவர்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிவீர்கள்.
 • செலவுகள் யாவும் கட்டுபாட்டுக்குள் இருந்தாலும் எதிர்காலத்திற்கு சேமிக்க முடியாது.
 • உங்கள் பொருளாதார நிலையை உணர்ந்து அதை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இது சரியான நேரமாக இருக்கும்.
 • மேலும் பண பற்றாக்குறை காரணமாக பழைய கடன்களையும் அடைக்க முடியாமல் போகலாம்.
 • குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் எதுவும் இன்றி கலகலப்பாக இருக்கும்.
 • குடும்ப விவகாரங்களை சிறந்த முறையில் கையாளுவீர்கள்.
 • எப்போதுமே உணர்ச்சி வசப்படாமல் சற்று பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
 • நீங்கள் சாதுரியமாக நடந்து  கொள்வது குடும்பத்திற்கு நல்லது.

https://www.tomorrowhoroscope.com/சிம்மம்-குருபெயர்ச்சி-பல/

தொழில்:

 •  உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும்.
 • கொடுத்த வேலையில் முழு மூச்சுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
 • பொதுவாக உங்கள் வேலை மற்றும் தொழில் தொடர்பான அணைத்து விஷயங்களையும் கவனத்துடனும் மற்றும் பொறுமையுடனும் கையாள வேண்டும்.
 • அதாவது மற்றும் வியாபாரத்தில் சராசரி பலன்கள் கிடைக்கும்.
 • உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல லாபம் கிடைக்கும்.
 • சிலருக்கு ஊதிய உயர்வு ,பதவி உயர்வு மற்றும் நீங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
 • உங்கள் கடின உழைப்பு மற்றும் உங்கள் வேலை முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
 • 6ல் உள்ள குரு பகவான் எப்படி பார்த்தாலும் பல வகையில் நன்மைகளை செய்து இந்த குரு பெயர்ச்சியை உங்களுக்கு சாதகமாக மாற்றிடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

https://www.tomorrowhoroscope.com/கடகம்-குருபெயர்ச்சி-பலன்/

கன்னி குருபெயர்ச்சி பலன்கள் வியாபாரம்:

 • பண விஷயங்கள் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும்.
 • அதவது நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு இருக்கும்.
 • வருமானம் கணிசமாக உயரும்.
 • பொருளாதார ஏற்றம் சிறப்பாக இருக்கிறது.
 • வெளிநாட்டு முதலீடுகள் லாபங்களை பெற்று தரும்.
 • இந்த கால கட்டத்தில் வீடு பராமரித்தல்,பயணங்கள் செல்லுதல் என தரமான விஷயங்களுக்கு நீங்கள் பணத்தை செலவு செய்ய நேரும்.

https://www.tomorrowhoroscope.com/மிதுனம்-குருபெயர்ச்சி-பல/

ஆரோக்கியம்:

 • சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.
 • உங்கள் சிறப்பான செயல்பாட்டிற்கு சிறந்த ஆரோக்கியம் முக்கியமாக இருக்கிறது.
 • அதாவது இந்த கால கட்டத்தில் அதிக பணிகள் காரணமாக உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்காமல் நீங்கள் காத்து கொள்ள வேண்டும்.
 • இந்த காலத்தில் கழுத்து வலி ,முதுகு வலி போன்ற உடல் உபாதைகள் அவ்வப்போது வந்து போகும்.
 • எனவே உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க யோகா ,தியானம்,உடற்பயிற்சி போன்றவற்றை செய்ய வேண்டும்.

ரிஷபம் குருபெயர்ச்சி பலன்கள் 2021 to 2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *