கடக ராசி புரட்டாசி மாத ராசிபலன் 2021

கடக ராசி புரட்டாசி மாத ராசிபலன் பிலவ வருடம் 2021 :

  • எந்த ஒரு காரியத்தியும் வைராக்கியத்துடன் முடித்து காட்டும் கடக ராசி அன்பர்களே,
    இந்த புரட்டாசி மாதம் முழுவதும் என்ன என்ன பல ஸ்வரஷ்யமான பலன்கள் நடக்கப்போகிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
  • புரட்டாசி மாத கிரகநிலை:
    இந்த மாதம் கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார்.
  • கன்னி ராசியில் புதன் ,செவ்வாய் மற்றும் சூரியன் சேர்க்கை உள்ளது.
    மகரத்தில் குரு,சனி-துலாமில் சுக்கிரன், ரிஷப ராசியில் ராகு சஞ்சாரம் இருக்கிறது மற்றும் விருச்சிகத்தில் கேது என இந்த மாதம் கிரகங்கள் சஞ்சாரம் வலம் வருகிறது.

கடக ராசி கிரக நிலை:

  • சுக ஸ்தானத்தில் சுக்ரன், தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய்,புதன்-லாப ஸ்தானத்தில் ராகு- பஞ்சம ஸ்தானத்தில் கேது-களத்திர ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி
    என கிரகங்கள் வலம் வருகின்றன.

கடக ராசி பலன்கள்:

  • எந்த ஒரு செயலையும் வைராக்கியத்துடன் செய்து முடிக்கும் கடக ராசிகாரர்களே,
    இந்த மாதம் பயணங்களில் சந்தோசம் அடைவீர்கள்.
  • இந்த மாதம் நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்தாலே வெற்றி அடைவீர்கள்.எந்த ஒரு செயலையும் விடாபிடியாக செய்து விடுவீர்கள்.
  • இதனால் இந்த கால கட்டத்தில் உங்களுக்கு பெயர்,புகழ் கிடைக்கும்.

கடக ராசி தொழில்:

  • இந்த மாதம் தொழிலில் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.
  • இதனால் தொழிலில் இந்த மாதத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
    அப்படியே ஏதாவது ஒரு பிரச்சினை வந்தாலும் அதை புத்தி மற்றும் பேச்சு வழக்கில் சமாளிப்பீர்கள்.
  • மேலும் காரியத்தில் வெற்றி பெறுவதால் மகிழ்ச்சி யாக இருப்பீர்கள்.

கடக ராசி

வியாபாரம்:

  • உங்களுக்கு இந்த மாதம் வியாபாரம் சிறப்பாக அமையும். வியாபாரம் ரீதியாக வெளியூர் பயணம் செய்ய நேரிடலாம்.
  • இந்த கால கட்டத்தில் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். இதனால் நல்ல லாபம் கிடைக்கும்.
  • கூட்டு வியாபாரிகளுக்கு எதிர்பார்ப்பதை விட வருமானம் கிடைப்பதால் சேமிப்பை மேற்கொள்ளுங்கள். புதிய ஆர்டர்கள் வந்து சேரும்.
  • புதிய திட்டங்களை செயல் வடிவில் கொண்டு வருவீர்கள்.இதுவரை வசூல் ஆகாமல் நின்ற பாக்கி தொகை அனைத்தும் வசூலாகும்.பயணங்கள் சாதகமான பலன் தரும்.

https://www.tomorrowhoroscope.com/விருச்சிக-ராசி-புரட்டாசி/

உத்தியோகம்:

  • நீங்கள் இந்த மாதம் முன்னேற்றம் அடைவீர்கள். நீங்கள் சக பணியாளர்களிடம் சகஜமாக இருப்பதன் மூலம் உங்களுக்கு நன்மை உண்டாகும்.
  • உங்கள் வேலையை சரியாக செய்வதன் மூலம் மேல் அதிகாரிகளின் முழு ஆதரவையும்,பாராட்டையும் பெறுவீர்கள். இதனால் நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வும்,பதவி உயர்வும் கிடைக்கும்.
  • இந்த கால கட்டத்தில் எந்த ஒரு செயலிலும் திட்டமிட்டு செயலாற்றினால் நிர்வாகத்தின் ஆதரவு இருக்கும்.

https://www.tomorrowhoroscope.com/துலாம்-ராசி-இல்-புதன்-அடு/

குடும்பம்:

  • குடும்பத்தில் கணவன் மனைவி இடையே வாக்கு வாதம் ஏற்படாமல் இருக்க இருவரும் அனுசரித்து, விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.
  • இதன் மூலம் இருவருக்குமிடையே ஓற்றுமை ஏற்படும்.
    சகோதரர்கள் மூலம் உதவியும் கிடைக்கும்.
  • பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

பெண்கள் :

  • கடக ராசி பெண்கள் இந்த மாதம் இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்தும் நடந்து முடியும்.
  • எதை செய்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து நிதானமாக செயல்படுத்த வேண்டும்.
  • மேலும் பணி புரியும் பெண்களுக்கு உபரி வருமானம் கிடைக்கும்.பொதுவாக பெண்கள் ஆடம்பர செலவுகளை குறைத்து தேவையான செலவுகளை மட்டும் செய்ய வேண்டும்.

https://www.tomorrowhoroscope.com/மேஷ-ராசி-புரட்டாசி-மாத-ரா/

மாணவர்கள் :

  • கடக ராசியில் படிக்ககூடிய மாணவர்களுக்கு கவனம் சிதறல் ஏற்படும். எனவே பாடத்தை முழு ஈடுபாட்டுடன் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண் எடுக்கலாம்.
  • தியானம் செய்து விட்டு படிப்பதன் மூலம் எளிதாக பாடங்களை படிக்க முடியும்.சக மாணவர்களுடன் விளையாடும் ஆர்வம் அதிகரிக்கும்.
  • கலை துரையினருக்கு இந்த மாதம் வெற்றிகள் அதிமாக கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

பரிகாரம் :

  • சரஸ்வதி தேவியை பூஜித்து வழிபட உங்கள் தொழிலில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறையும்.காரியங்களில் வெற்றி உண்டாகும்.கல்வியில் சிறந்து விளங்க முடியும்.
  • தினம்தோறும் காலையில் நடைப்பயிற்சி செய்து வர அன்றைய நாள் சுறுசுறுப்பாக இருப்பதோடு ஆரோக்கிய ரீதியாக எந்த ஒரு பிரச்சனையும் வராது.

மிதுன ராசி புரட்டாசி மாத ராசிபலன் 2021

 

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *