கடக ராசி அக்டோபர் மாதம் ராசிபலன் 2021

கடக ராசி அக்டோபர் மாதம் ராசிபலன் 2021:

இந்த பதிவில் கடக ராசி அக்டோபர் மாதம் ராசிபலன்களை பற்றி பார்க்கலாம் :

 • எந்த ஒரு செயலையும் வைராக்கியத்துடன் செய்து முடிக்கும் கடக ராசி நேயர்களே!
  இந்த மாதம் குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும்.
 • இந்த கால கட்டத்தில் உங்களுக்கு நன்மை தீமை கலந்த பலன்களே தரும்.கடந்த கால சேமிப்புகள் மூலம் லாபம் கிடைக்கும்.
 • சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.அதாவது இதுவரை கால தாமதம் ஏற்பட்ட செயல்களுக்கு முடிவு காலம் வர போகிறது.
 • திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடக ராசி அக்டோபர் மாதம் கிரகநிலை:

 • அக்டோபர் மாதம் கிரகநிலைகளைஆராய்ந்து பார்த்தால் ரிஷிப ராசியில் ராகு இருப்பது தொழில் ரீதியான நல்ல லாபத்தை ஏற்படுத்தி கொடுப்பார்.
 • கன்னி ராசியில் சூரியன்,செவ்வாய் கிரக சேர்க்கை ஏற்படுகிறது.மகர ராசியில் குரு வக்ர கதியிலும்,சனி சேர்க்கையும் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு வகையான மாற்றங்களை ஏற்படுத்தும்.
 • பேசும் வார்த்தைகளில் கவனம் வேண்டும்.இதனால் நிறைய சிக்கல்களை தவிர்க்க முடியும்.

கடக ராசி அக்டோபர் மாதம்

கடக ராசி அக்டோபர் மாதம் வாழ்க்கை:

 • கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஒற்றுமையாக இருப்பீர்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
 • குடும்பத்தை பொறுத்தவரை நல்ல சம்பவங்கள் நடக்கும்.இருந்தாலும் நீங்கள் கொஞ்சம் விட்டு கொடுத்து செல்லனும்.வீண் வாக்கு வாதங்களை தவிர்த்து பெரியவர்களிடம் பேசும் போது சற்று நிதானமாக பேச வேண்டும்.
 • அவர்களின் அறிவுரைகளை பின்பற்றினால் எதிர்காலத்திற்கு நல்லது. ஆடை,ஆபரண சேர்க்கை பெண்களுக்கு உண்டாகும்.
 • உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து தரப்புகளிடம் சுமுகமான நிலை இருக்கும்.

https://www.tomorrowhoroscope.com/4-கிரகம்-ஒன்று-சேருவதால்-அ/

கடக ராசி அக்டோபர் மாதம் பொருளாதாரம்:

 • இந்த மாதம் நிதி நிலையை பொறுத்தவரை லாபம் அதிகமாவே இருக்கும்.ஆடம்பர செலவை குறைத்து கொண்டால் சேமிக்க முடியும்.
 • கொடுக்கல், வாங்கல் நன்றாகவே இருக்கும்.அதிக பணம் கடன் கொடுக்கவும் வேண்டாம்.வாங்கவும் வேண்டாம்.
 • ஊடகத்துறை, கல்வித்துறை மற்றும் சட்டத்துறையில் இருப்பவர்கள் சிறந்த முறையில் லாபம் கிடைக்கும்.

கலைஞர்கள்:

 • இசை,நாடகம் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
 • உங்கள் வேலைகளை நீங்களே முன்னின்று பார்க்க வேண்டும்.யாரையும் நம்பி பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம்.

https://www.tomorrowhoroscope.com/மிதுனராசி-அக்டோபர்-மாதம்/

விவசாயம்:

 • விவசாயம் செய்பவர்களுக்கு பயிர் விளைச்சல் நன்றாக வளர்ந்து,எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
 • பருவ கால மழை பெய்து வருவதால் உங்கள் விளைச்சல் நல்ல மசூல் தரும்.இதன் மூலம் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.

அரசியல்வாதி:

 • அரசியல் துறையில் இருப்பவர்கள் இந்த மாதம் நல்ல பலன் கிடைக்கும்.இருந்தாலும் மேடை பேச்சுகளில் சற்று யோசித்து கவனமாக பேச வேண்டும். மக்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
 • அரசு அலுவலகத்தில் வேலை செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை வேண்டும்.வார்த்தைகளை உபயோகிக்கும் முன்பு சிந்தித்து பேச வேண்டும்.

மாணவர்கள்:

 • பள்ளிகல்வி பயிலும் மாணவர்கள் கவனமுடன் பாடங்களை படிக்கவும்.
 • படிப்பில் கவனசிதறல் ஏற்படாமல் இருக்க தியானம் செய்து விட்டு படிக்க ஞாபக சக்தி அதிகரிக்கும்.நண்பர்கள்,பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும்.
 • வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு விரும்பிய கல்வி படிக்க நீங்கள் கேட்ட இடத்தில் இடம் கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/சிம்ம-ராசி-அக்டோபர்-மாதம/

ஆரோக்கியம்:

 • ஆரோக்கியம் இந்த மாதம் நன்றாக இருக்கும் என்றாலும் சிறு சிறு உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
 • தந்தை உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.மருத்துவ செலவு மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம்.
 • பணியில் வேலை பளு அதிகமாக இருப்பதால் பதட்டம் ஏற்படும். இந்த நிலையால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்.
 • பெரிய அளவில் எந்த பாதிப்பும் வராது என்பதால் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை.

புனர்பூசம்:

 • இந்த மாதம் கிரகநிலைகளை ஆராய்ந்து பார்க்கும் போது புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை சில தடைகளை தாண்டி கிடைக்கும்.
 • இந்த மாதத்தில் பணவரவு கணிசமாக உயரும். பங்குசந்தை முதலீடுகள் அதிக லாபம் கொடுக்கும்.
 • நல்ல ஆரோக்கியமான உணவு,முறையான ஓய்வு மற்றும் உடம்பிற்கு தேவையான உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை செய்ய வேண்டும். இதன்மூலம் உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும்.

பூசம்:

 • இந்த மாதம் வியாபாரம் செய்பவர்களுக்கு அதிஷ்டமான மாதமாக இருக்கிறது. பெண்களுக்கு மனதிற்கு பிடித்த வரன் அமையும்.
 • மருத்துவ செலவுகள் எட்டிப்பார்க்கும்.பெண்களுக்கு குடும்பத்தில் சில தகராறு ஏற்பட்டு நீங்கும்.
 • வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பெரியவர்களின் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து கட்டுப்பட்டு நடந்தால் எந்த பாதிப்பும் வராது.

ஆயில்யம்:

 • இந்த மாதம் நல்ல சம்பவங்கள் நிறைய நடக்கும்.சுப நிகழ்ச்சிகளால் வீடு சந்தோசம் அதிகரிக்கும்.உடன் பணிபுரிபவர்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள்.
 • கணவன், மனைவி உறவில் அன்பும்,அந்நியோன்யம் அதிகமாகும்.வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.எனவே உணவு விஷயத்தில் சற்று அக்கறை தேவை.

பரிகாரம்:

 • சனிக்கிழமை சனி பஹாவனுக்கு எள் எண்ணெய் விட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் திருமண தடை,தாமதம் நீங்கி,வெற்றி கிடைக்கும்.

இன்னும் விளக்கமாக தெரிந்துகொள்ள இந்த விடியோவை பார்க்கவும்

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *