கடகம் குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

கடகம் குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022:

கடகம் குருபெயர்ச்சி பலன்கள் 2021…இந்த ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்கின்ற துல்லிய ஜோதிட கணிப்பை இந்த பதிவில் பார்க்கலாம்..

 • அனைவரிடமும் கனிவுடன் பழகும் கடக ராசி அன்பர்களே!!மகர ராசியில் அமர்ந்து உங்கள் ராசியை பார்த்து கொண்டிருந்த குரு பகவான் 20.11.2021 முதல் கும்ப ராசிக்கு மாறுகிறார். உங்கள் ராசியை பொறுத்தவரை 8ம் வீட்டில் அஷ்டம குருவாக கும்பராசியில் குரு சஞ்சரிப்பார்.
 • குரு பார்வை பட்டாலே நமது ஜாதகத்த்தில் பலன் அதிஷ்டங்களை அனுபவிக்க வேண்டும்.
 • அந்த வகையில் அஷ்டம குரு பதிப்பை ஏற்படுத்துவார் என்ற எண்ணம் உங்களுக்குள் வந்திருக்கும்.
 • ஆனால் சுப கிரகம் உங்களுக்கு ஒரு சில அதிஷ்ட பலன்களை கொடுப்பார்.அது என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

கடகம் குருபெயர்ச்சி பலன்கள்

சுப கிரகம் 8இல் தரும் பலன் :

 • கடக ராசிக்கு குரு பகவான் 8இல் அமர்ந்து தூரதேச பயணங்கள்,வெளிநாடு வர்த்தகம் ,பணவரவு போன்ற வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பார்.
 • வெளிநாடு செல்லும் கனவு நனவாகும்.கூட்டுத்தொழி லில் லாபம் கிடைக்கும்.
 • எதிர்பார்த்த நல்ல விசியங்கள் தடை நீங்கி நல்லபடியாக நடக்கும்.
 • ஜோதிடத்தில் குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் பலன் அதிகம் என்பது உண்மைதான்.
 • அந்த வகையில் உங்களுக்கு இருக்கும் இடத்தை விட பார்க்கும் பார்வை பலனும் சாதகமாக இருக்கிறது.
 • நம்பிக்கை இழந்து இருந்த நீங்கள் இனி உற்சாகமாக இருப்பீர்கள்.

உறுப்பினர்களிடம் பொறுமை:

 • குடும்பத்தில் இருந்த சண்டைகள்,சங்கடங்கள் நீங்கி காணப்படும்.
 • இருந்தாலும் எதிலும் முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது.
 • பேசும் வார்த்தைகளில் நிதானம் இருந்தால் எந்த பாதிப்பும் வராது.
 • கணவன்,மனைவி இடையே சண்டைகளை தவிர்ப்பது நல்லது.
 • விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.

https://www.tomorrowhoroscope.com/மிதுனம்-குருபெயர்ச்சி-பல

கடகம் குருபெயர்ச்சி பலன்கள் குடும்பம்:

 • பூர்வ புண்ணிய ஸ்தானத்தை 5ம் இடம் குரு பார்வை கிடைப்பதால் நிதி சமந்தசப்பட்ட நன்மைகள் ஏற்படும்.
 • குலதெய்வ பிரத்தனையை நிறைவேற்றி நிம்மதி உண்டாகும்.
 • ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
 • வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கும் போது மட்டும் அலட்சியாம் வேண்டாம்.
 • ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் சேமிக்க முடியும்.இல்லையென்றால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

வியாபாரிகளுக்கு அதிஷ்டம்:

 • புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள்.ஆனால் உங்கள் வேலையை நீங்கள் முன்னின்று பார்ப்பது நல்லது.
 • கொடுக்கல்,வாங்கலில் வரவேண்டிய பாக்கிகளை சாமர்த்தியமாக பேசி வாங்கி விடுவீர்கள்.
 • எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும்.
 • அரசு சம்பந்தப்பட்ட வேலையில் கவனம் வேண்டும்.
 • விதிமீறல்கள் ஏதாவதொரு வகையில் இழப்பை ஏற்படுத்திவிடும்.
 • பங்கு சந்தையில் அதிக முதலீடு செய்ய வேண்டாம்.

https://www.tomorrowhoroscope.com/meenam-guru-peyarchi-2021/

மாணவர்கள் கவனம்:

 • 6ம் இடது குரு உங்களை சோம்பேறி ஆக்கிவிடுவார்.
 • எதிலும் சுறுசுறுப்பாக படிக்க வேண்டும்.
 • நண்பர்களுடன் வெளி இடங்களுக்கு செல்லும் போது வண்டிகளில் மிதமான வேகத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
 • கடினமாக உழைத்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் பெறமுடியும்.
 • நண்பர்களின் ஆதரவு அனுகூலத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.

கடகம் குருபெயர்ச்சி பலன்கள் அரசியல்:

 • அரசியல்வாதிகள் மேடை பேச்சுகளில் விழிப்புணர்வு வேண்டும்.
 • மக்களின் ஆதரவு கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.
 • செயல்களை துரிதமாக செய்ய வேண்டும்.அரசால் சில சங்கடங்கள் சந்திக்க வேண்டும்.ஏனென்றால் அரசு விதிமீறல்கள் செய்தல் அதற்குண்டான பாதிப்பு கிடைக்கும்.
 • முடிந்தளவு கட்டணம் அனைத்தையும் சரியாக கட்ட வேண்டும்.

ஆகமொத்தம் இந்த குருபெயர்ச்சி தடைகளை உருவாக்கினாலும் அதிலிருந்து உங்களை காக்கும் பாடத்தை கற்றுக்கொடுக்கும்.எதிர்கால நலனுக்காக சில திட்டங்களை வகுப்பீர்கள்.

பரிகாரம்:

 • திருச்செந்தூர் முருகனை வழிபாடு செய்தால் சுபிக்க்ஷம் உண்டாகும்.தடை நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும்.

kumbam guru peyarchi 2021 to 2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *